செய்திகள் :

'இந்த இரண்டு படங்கள் இல்லைன்னா விஜய் கட்சி ஆரம்பிச்சிருக்க முடியுமா?' - இயக்குநர் R.V. உதயகுமார்

post image
'மனிதம்' படத்தின் இசைவெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது.

அதில் இயக்குநர்கள் பாக்கியராஜ், R.V.உதயகுமார், அரவிந்தராஜ், இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் R.V. உதயகுமார், " திருப்பாச்சி மற்றும் சிவகாசி திரைப்படங்கள் இல்லை என்றால் நடிகர் விஜய் இவ்வளவு ஃபேமஸ் ஆகி இருப்பாரா? இந்த இரண்டு படங்கள் இல்லையென்றால் விஜய் கட்சியை ஆரம்பித்திருக்க முடியுமா? நான் இப்படி சொன்னதற்கு இதற்கு எனது தம்பி விஜய் கோபித்து கொள்ள மாட்டார்.

TVK Vijay
TVK Vijay

இரண்டு திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த பாடல்கள்தான் விஜய்யை இந்த அளவுக்கு ஃபேமஸ் ஆக்கி இருக்கிறது. விஜய்யை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கின்றது. விஜய்க்கு இன்றைக்கு வரை பேசப்படும் படங்களாக இந்த இரண்டு திரைப்படங்களும் இருக்கின்றது. அதை அவர் மறந்து விடக் கூடாது" என்று பேசியிருக்கிறார். R.V. உதயகுமாரின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mysskin: ``பூனைக்கு யார் மணி கட்டுவது அதனால்தான்" - மிஷ்கின் குறித்து அருள்தாஸ்

'பாட்டல் ராதா' புரொமோஷன் விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா. ரஞ்சித் முதலிய இயக்குநர்கள் கூடிய விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசியது மிகுந்த கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.பேச்சில் அடிக்கடி ... மேலும் பார்க்க

Ilaiyaraaja: `நான் வருகிறேன்'- எந்தெந்த ஊர்களில் இசைக் கச்சேரி? - அப்டேட் கொடுத்த இளையராஜா

அடுத்தடுத்து எந்த ஊர்களில் இசைக்கச்சேரி நடைபெறும் என்ற அறிவிப்பை இளையராஜா அறிவித்திருக்கிறார்.இளையராஜா படங்களுக்கு இசையமைப்பது குறைந்திருந்தாலும் இசைக்கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார். க... மேலும் பார்க்க

NEEK : "எப்படி இந்தப் படத்தை எடுத்தீர்கள்..." - தனுஷ் பற்றி வியந்த SJ சூர்யா!

ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இந்த படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்தரன், பவிஷ், ரபியா, வெங்கடேஷ் மேனன், சித்... மேலும் பார்க்க