செய்திகள் :

``இந்தியாவைத் தலைமை தாங்க நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்'' - மோடிக்கு ரஜினிகாந்த், இளையராஜா வாழ்த்து

post image

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்தும், இசையமைப்பாளர் இளையராஜாவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கின்றனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் பதிவில், "உங்களுடைய பிறந்தநாளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் நரேந்திர மோடி ஜி. நம் அன்பு நாடான இந்தியாவை தலைமை தாங்க எப்போதும் நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நிலையான வலிமை கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஜெய்ஹிந்த்!" என வாழ்த்தி இருக்கிறார்.

அதேபோல் இளையராஜா வெளியிட்டிருக்கும் பதிவில், " நமது கௌரவமிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி-ஜிக்கு மிகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் ஊக்கமூட்டும் தலைமைத்துவமும், மனமார்ந்த அர்ப்பணிப்பும் இந்தியாவை ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்காக வழிநடத்துகிறது.

இளையராஜா, மோடி
இளையராஜா, மோடி

நீண்ட ஆயுள், சந்தோஷம் உங்களுக்கு கிடைக்க வேண்டும். சிறந்த இந்தியாவை உருவாக்கும் உங்கள் பயணத்தில் மேலும் அதிகமான வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

``இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசை இருக்கு, ஆனா'' - கமலுடன் இணைந்து நடிப்பது குறித்து ரஜினி

'அபூர்வ ரகங்கள்', 'மூன்று முடிச்சு', 'அவர்கள்', 'பதினாறு வயதினிலே' போன்ற படங்களில் இணைந்து நடித்த கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் மீண்டும் இணைந்து எப்போது நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில... மேலும் பார்க்க

Meena: ``அன்று செளந்தர்யாவுடன் நானும் பிரசாரத்திற்கு செல்ல வேண்டியது!" - நடிகை மீனா ஷேரிங்ஸ்

நடிகை மீனா எவர்கிரீன் நாயகியாக தொடர்ந்து கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என தூள் கிளப்பி வருகிறார். சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபு பேட்டியெடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்... மேலும் பார்க்க

Sandy: ``திருநங்கையாக நடிப்பது பெருமை!" - தமிழ், தெலுங்கு, மலையாளம் என வில்லனாக கலக்கும் சாண்டி!

'லியோ' படத்திற்குப் பிறகு நடன இயக்குநர் சாண்டி தொடர்ந்து அடர்த்தியான வில்லன் கதாபாத்திரங்களில் களமிறங்கி நல்லதொரு நடிப்பையும் கொடுத்து வருகிறார். அப்படி சமீபத்தில் லோகா' படத்திலும் கொடூர வில்லனாக தன்ன... மேலும் பார்க்க

இட்லி கடை: ``நான் ஒரு நல்ல தகப்பன் என நெஞ்சை நிமிர்த்தி பெருமையாகச் சொல்வேன்'' - நெகிழும் தனுஷ்

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் `இட்லி கடை' திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே எனப் பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி... மேலும் பார்க்க