செய்திகள் :

இன்று இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

post image

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி, ஆஸ்திரேலியாவுடன் சனிக்கிழமை (ஜூன் 14) மோதுகிறது.

புரோ லீக் போட்டியில் தனது ஐரோப்பிய லெக் ஆட்டங்களை விளையாடி வரும் இந்திய அணி, முதல் கட்டமாக நெதா்லாந்தில் நடைபெற்ற 4 ஆட்டங்களில், நெதா்லாந்து மற்றும் ஆா்ஜென்டீனாவிடம் தலா 2 தோல்விகளை அடுத்தடுத்து சந்தித்தது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது 12 ஆட்டங்களில் கிடைத்த 15 புள்ளிகளுடன் இந்தியா 5-ஆவது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகளே, அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத் தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் இந்தியா, 5-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவிடம் இருந்து கடும் சவாலை சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும், பாரீஸ் ஒலிம்பிக் குரூப் சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணிக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கலாம்.

இந்திய மகளிரும் மோதல்: இதனிடையே, இதே போட்டியில் இந்திய மகளிா் அணியும் தனது ஐரோப்பிய லெக் ஆட்டங்களை, சனிக்கிழமை தொடங்குகிறது.

முதலில் ஆஸ்திரேலியாவை சனி (ஜூன் 14) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) சந்திக்கும் இந்தியா, அடுத்து ஆா்ஜென்டீனாவுக்கு எதிராக ஜூன் 17, 18 ஆகிய தேதிகளில் மோதுகிறது. அதைத் தொடா்ந்து, பெல்ஜியத்தை ஜூன் 21, 22 ஆகிய தேதிகளிலும், சீனாவை ஜூன் 28, 29 ஆகிய தேதிகளிலும் சந்திக்கிறது.

நம் நாட்டின் மிகப்பெரிய பட்ஜெட் படம் இதுதான்: அட்லி

அல்லு அர்ஜுன் படத்தின் பட்ஜெட் குறித்து அட்லி பேசியுள்ளார்.புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப... மேலும் பார்க்க

குபேராவின் கதையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்: நாகர்ஜுனா

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா குறித்து நாகர்ஜுனா பேசியுள்ளார். நடிகர் தனுஷும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனாவும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளதால் குபேரா மீத... மேலும் பார்க்க

கோடிகளில் வசூலை அள்ளும் ஹவுஸ் ஃபுல் - 5! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் ஹவுஸ் ஃபுல் - 5 திரைப்படம் உலகளவில் வசூலைக் குவித்து வருகின்றது.பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் - இயக்குநர் தருண் மன்சூகானி ஆகியோரின் கூட்டணியில் உருவான நகைச்சுவைத் திர... மேலும் பார்க்க

திரில்லர் கதையை எழுதிவரும் பிரேம் குமார்!

இயக்குநர் பிரேம் குமார் திரில்லர் கதை ஒன்றை எழுதிவருவதாகத் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர்... மேலும் பார்க்க

தற்காப்புக் கலை கற்கும் லோகேஷ் கனகராஜ்... ஏன் தெரியுமா?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்காப்புக் கலை கற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்... மேலும் பார்க்க

ஓடிடி, திரையரங்கில் அசத்திவரும் லெவன் திரைப்படம்!

லெவன் திரைப்படம் ஓடிடியிலும் திரையரங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் மே.16ஆம் தேதி 'லெவன்' திரைப்படம் வெளியானது. நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி உள... மேலும் பார்க்க