செய்திகள் :

திரில்லர் கதையை எழுதிவரும் பிரேம் குமார்!

post image

இயக்குநர் பிரேம் குமார் திரில்லர் கதை ஒன்றை எழுதிவருவதாகத் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கி அதிலும் வெற்றி பெற்றார்.

தற்போது, 96 இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளார். ஆனால், நடிகர்களின் தேர்வு குழப்பங்களால் அப்படம் இன்னும் ஆரம்பமாகவில்லை.

இந்த நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட பாடகி சின்மயி, இயக்குநர் பிரேம் குமாருக்கு அழைத்து, “96 - 2 அப்டேட் கொடுங்க” எனக் கேட்டார்.

இதற்கு, பிரேம் குமார், “96 - 2 படத்திற்கான கதை, திரைக்கதையை எழுதிவிட்டேன். ஆனால், அப்படம் கொஞ்சம் தாமதமாகும். இப்போது, திரில்லர் கதை ஒன்றை எழுதிவருகிறேன். இது, நல்ல விறுவிறுப்பான கதையாக இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

பிரேம் குமார் அடுத்ததாகத் திரில்லர் கதையைத் திரைப்படமாக எடுக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: தற்காப்புக் கலை கற்கும் லோகேஷ் கனகராஜ்... ஏன் தெரியுமா?

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஆா்யா-அா்ஜுனுக்கு தங்கம்

ஐஎஸ்எஸ் எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் கலப்பு பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் இந்தியாவின் ஆா்யா போல்ஸே-அா்ஜுன் பபுதா தங்கம் வென்றனா். ஜொ்மனின் மியுனிக் நகரில் நடைபெறும் இப்போட்டியில் 10 ... மேலும் பார்க்க

இயக்குநராக விரைவில் அறிமுகமாகும் நடிகர் பார்த்திபன் மகன்!

தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,ராக்கி பார்த்திபன் !என் மகன் என் உயி... மேலும் பார்க்க

ஓடிடியில் ஏஸ்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஏஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் ஆறுமுகக்குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் ஏஸ். முழுக்கதையும் மலேசியாவில் நடப்பதுபோல் எ... மேலும் பார்க்க

கண்ணப்பா டிரைலர்!

நடிகர்கள் பிரபாஸ், மோகன்லால் நடிப்பில் உருவான கண்ணப்பா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.முகேஷ் குமார் சிங் இயக்க, மோகன் பாபு தயாரித்துள்ள கண்ணப்பா படத்தில் பிரபாஸ், விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபு தேவா... மேலும் பார்க்க

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த முத்த மழை விடியோ வெளியீடு!

தக் லைஃப் படத்தில் இடம்பெறாத முத்த மழை பாடலின் விடியோவை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜுன். 5 ஆம் தேதி வெளியா... மேலும் பார்க்க