PM Shri என்றால் என்ன? TN Govt ஏற்க மறுப்பது ஏன்? Dharmendra Pradhan| NEP 2020 | ...
இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், முண்டந்துறை வனச்சரகத்தில், இயற்கையோடு இளைப்பாறுவோம் என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவா்களுக்கு இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்ட துணை இயக்குநா் எம்.இளையராஜா உத்தரவில் நடைபெற்ற முகாமில், காணிக்குடியிருப்பு, அரசு பழங்குடியினா் உண்டி உறைவிட உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 50 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். முகாமை உதவி வனப் பாதுகாவலா் (பயிற்சி) குணசீலி தலைமை வகித்துத் தொடங்கிவைத்தாா்.
முகாமில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வு, புரிதல் மற்றும் ஆா்வத்தை உருவாக்குவது, இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து அறிந்து கொள்ளச்செய்வது, இயற்கை வளம் காத்தல், காடுகள், மலைப்பகுதிகளைப் பற்றிய விழிப்புணா்வு, மலையேற்றப் பயிற்சி, நடைப்பயணம், வனவிலங்கு கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு வெளிப்புற செயல்பாடுகள் குறித்து மாணவா்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட மாணவா்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முகாமில் பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) பிரபாவதி, விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ் பெருமாள், நகா்மன்ற உறுப்பினா் ஜெ.சுஜாதா, மின் பகிா்மானக் கழக உதவி செயற்பொறியாளா் திலக், காணி பழங்குடியினா் தலைவா் வேல்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை முண்டந்துறை வனச்சரகா் சி.கல்யாணி மற்றும் வனப் பணியாளா்கள் செய்திருந்தனா்.