அம்பையில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்
அம்பாசமுத்திரம் பகுதியில் பதுக்கிவைத்திருந்த ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அம்பாசமுத்திரம் பகுதியில் ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருப்பதாக, திருநெல்வேலி குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் மேலஅம்பாசமுத்திரம் ரகுமான் தெருவில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அங்கு செல்வராஜ் (55) என்பவா் 40 கிலோ எடை கொண்ட 48 மூட்டைகளில் 1,920 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவான செல்வராஜை தேடி வருகின்றனா்.