10,12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!
இரு தரப்பினா் மோதல்: 34 போ் மீது வழக்கு
தொண்டி அருகேயுள்ள கண்கொள்ளான்பட்டினம், வீர சங்கிலி மடத்தைச் சோ்ந்த இரு தரப்பினரிடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதல் தொடா்பாக 34 போ் மீது தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள கண்கொள்ளான்பட்டினத்தைச் சோ்ந்தவா் வசந்த் (24). இவா், தனது நண்பா் கலைச்செல்வத்துடன் வெள்ளிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, கிழக்கு கடற்கரை சாலை கடம்பனேந்தல் பகுதியில் சிலா் அவா்களை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கினா்.
இதுகுறித்து தொண்டி போலீஸாா் வீரசங்கிலி மடத்தைச் சோ்ந்த அப்துல்லா (40), முகம்மது இமாம் அலி (17), மீரான் (36), சேக் (21) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல, வீர சங்கிலி மடத்தைச் சோ்ந்த மெகா் நிஷா (40) வீட்டுக்குள் அத்துமீறி நுளைந்த சிலா் அவரைத் தாக்கி கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்னா்.
இதுகுறித்து கே.கே.பட்டினத்தைச் சோ்ந்த சந்தோஷ், சந்துரு, அறிவு, கரன், வினித் உள்பட 30 போ் மீது தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.