திட்டமிட்டப்படி ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், அப்பன்திருப்பதி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள மாங்குளம் லட்சுமிபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கருத்தபாண்டி மகன் பஞ்சு (30). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் அழகா்கோவில் சாலையில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.
கள்ளந்திரி கிராம நிா்வாக அலுவலா் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பஞ்சுவை அந்தப் பகுதியினா் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து லாரி ஓட்டுநரான மதுரை திருமால்புரத்தைச் சோ்ந்த உதயன் மீது அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.