செய்திகள் :

``இருமொழிக் கொள்கையை ஆதரிக்கும் கட்சிதான் தேர்தலில் வெற்றிபெறும்'' - அமைச்சர் KKSSR சொல்வதென்ன?

post image

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் சாத்தூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "நடப்பு நிதியாண்டில் தொடங்கப்பட்ட வளர்ச்சி பணிகள் அனைத்தையும் இந்த மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

கோடைகாலம் வருவதால் குடிநீர் பிரச்னை வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குப்பைகளை முறைப்படி தரம்பிரித்து அகற்றவும், தெருவிளக்குகளை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் மும்மொழிக்கொள்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, அறிஞர் அண்ணா காலத்திலிருந்தே இருமொழி கொள்கையைத்தான் தமிழகம் ஏற்றுள்ளது. இருமொழிக்கொள்கையை தான் தி.மு.க. அரசும் பின்பற்றி வருகிறது. அதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் இருமொழிக்கொள்கையை ஆதரிக்கும் கட்சிதான் அமோக வெற்றி பெறும்" என பதிலளித்தார்.

``புதிய பொறுப்பாளரை ஏற்க முடியாது'' - கொதிக்கும் புதுக்கோட்டை மாநகர திமுகவினர்... பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாநகர தி.மு.க செயலாளராக இருந்த அமைச்சர் ஆ.செந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கே.என்.நேரு ஆதரவாளராக இவர் இருந்து வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அந்த ப... மேலும் பார்க்க

Tasmac: `ரூ.1000 கோடி முறைகேடு' ED குற்றச்சாட்டு... அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன?

டாஸ்மாக் நிர்வாகத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ... மேலும் பார்க்க

TN Budget 2025: `நிறைய புதிய திட்டங்களை அறிவிச்சுருக்காங்க, ஆனா...' - எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

தமிழ்நாட்டின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின... மேலும் பார்க்க

TN Budget 2025: பள்ளியில் செஸ் பாடம் டு புதிய பட்டப்படிப்புகள் வரை! - கல்வி தொடர்பான அறிவிப்புகள்

தமிழ்நாட்டின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 9:30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பல முக்கிய அறிவிப்புகள் த... மேலும் பார்க்க

TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட்; சென்னையில் பொதுமக்கள் காண நேரலை ஏற்பாடு!

TN Budget 2025: சென்னையில் நேரலைTN Budget 2025: சென்னையில் நேரலைTN Budget 2025: சென்னையில் நேரலைTN Budget 2025: சென்னையில் நேரலைTN Budget 2025: சென்னையில் நேரலைTN Budget 2025: சென்னையில் நேரலைTN Budge... மேலும் பார்க்க

``லண்டன் சென்றபோது இந்தி பேசினாரா, ஆங்கிலம் பேசினாரா?'' - அண்ணாமலையை சாடும் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை நகர தி.மு.க சார்பில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்... மேலும் பார்க்க