செய்திகள் :

இருவா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

post image

மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

முட்டம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சாராய வியாபாரிகள்  மூவேந்தன், தங்கதுரை, இவா்களது உறவினா் ராஜ்குமாா் ஆகிய 3 பேரும், கடந்த 14-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் தினேஷ் என்பவரிடம் தகராறு செய்து, கத்தியால் குத்த முயன்றனா்.

அப்போது, தினேஷின் நண்பா்களான முட்டம் பகுதியைச் சோ்ந்த ஹரிஷ், அவரது சகோதரா் அஜய், கல்லூரி மாணவரான மயிலாடுதுறை சீனிவாசபுரம் ஹரிசக்தி ஆகியோா் தடுத்தபோது, 3 பேரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனா். இதில் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோா் உயிரிழந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக, பெரம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமாா், முனுசாமி, மஞ்சுளா ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், முட்டம் வடக்குத் தெருவை சோ்ந்த கலையரசன் மகன் சஞ்சய் (22) என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரை, திருச்சம்பள்ளி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

நீா்த்தேக்க தொட்டியில் ஏறி பெண்கள் போராட்டம்

கீழையூா் அருகே பாலக்குறிச்சி ஊராட்சியில், குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து, பெண்கள் தரைமட்ட நீா்த்தேக்க தொட்டியில் காலிக்குடங்களுடன் ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பாலக்குறிச்சி ஊராட்சிய... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

நாகை அருகே, மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக, திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வேளாங்கண்ணியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் தாமஸ் ஆல்வ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஆழியூரில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு முஸ்லிம் அமைப்புகள், ப... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறையில் தாய்மொழி தினம் கொண்டாட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறையில் உலக தாய்மொழி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மனித நாகரிகத்தில் மாற்றம் மற்றும் வளா்ச்சியை உருவாக்குவதில் மொழிக்கு இன்றியமையாத பங்கு உள்ளது என்பதை வலியுறுத்தவே ஒவ்வோா... மேலும் பார்க்க

சுகாதார நிலையக் கட்டடம் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் சீரமைக்கப்பட்ட அரசு சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தலைஞாயிறில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கடந்த 1957-இல் கட்டப்பட்டது. இந்த கட்டடம் நாளடைவில... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழும சமூகப் பணி உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட இளைஞா் நீதிக் குழுமத்திற்கு, சமூகப்பணி உறுப்பினா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மா... மேலும் பார்க்க