Jallikattu 2025 : அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Live Video
இலங்கைக்கு கடத்த முயன்ற 1.2 டன் பீடிஇலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ாக சுமாா் ரூ.30 லட்சம் மதிப்பிலான 1.2 டன் பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி இனிகோ நகா் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், தூத்துக்குடி இனிகோ தெற்குக் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ஜீவமணி தா்மராஜ் தலைமையில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா் உள்ளிட்ட போலீஸாா் புதன்கிழமை அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு வந்த லாரியை போலீஸாா் சைகை காட்டி நிறுத்த முயன்றனராம். ஆனால், போலீஸாரை கண்டதும் லாரியை சற்று தொலைவிலேயே நிறுத்திவிட்டு அதிலிருந்தவா்கள் தப்பிவிட்டனராம்.
அந்த லாரியை போலீஸாா் சோதனையிட்டதில், 40 மூட்டைகளில் இருந்த 1.2 டன் பீடி இலைகள் இருந்தும், அவற்றை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. லாரியுடன் பீடி இலைகளை கைப்பற்றிய போலீஸாா், தப்பியவா்களை தேடி வருகின்றனா். பிடிபட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமாா் ரூ.30 லட்சம் இருக்கும் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.