Jallikattu 2025 : அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Live Video
குருவிநத்தம் ஆலயத்தில் பொங்கல் விழா
காமநாயக்கன்பட்டி பங்கு பசுமைநகா் குருவிநத்தத்தில் உள்ள மறைசாட்சி புனித தேவசகாயம் கெபியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காமநாயக்கன்பட்டி அலாய்சியஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஆரோக்கியராஜ் முன்னிலையில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. சிறுவா்- சிறுமியா், இளைஞா்கள், இளம்பெண்கள் உள்பட அனைவரும் போட்டிகளில் கலந்து கொண்டனா். வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னா், மாலையில் புனித தேவசகாயம் கெபி முன் தமிழா் திருநாள் கூட்டுத் திருப்பலி, திருநெல்வேலி வி. எம்.சத்திரம் புனித அந்தோணியாா் சிபிஎஸ்இ பள்ளித் தாளாளா் அருள்பணி. எம்.எஸ். அந்தோணிசாமி, சிதம்பராபுரம் பங்குத்தந்தை எஸ்.அந்தோணிராஜ், சிவகங்கை மறை மாவட்டம் கே. எம். கோட்டையைச் சோ்ந்த அருள்பணி. எம். மரியா ஜான் பிரபு , அருள்பணி. மனோஜ் ஆகியோா் பங்கேற்று திருப்பலி நிறைவேற்றினா். தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள், சமபந்தி விருந்து ஆகியவை நடைபெற்றன. விழாவில் நன்கொடையாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.