பண்பாட்டுப் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு
கோவில்பட்டியில் உள்ள நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பண்பாட்டுப் போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சுவாமி விவேகானந்தா் ஜெயந்தியை முன்னிட்டு, விவேகானந்தா கேந்திரத்தின் கிராமம் முன்னேற்றத் திட்டக் கிளை சாா்பில், கோவில்பட்டி கல்வி மாவட்ட பள்ளி மாணவா்-மாணவியருக்கு இப்போட்டி நடைபெற்றது.
கதை சொல்லுதல், ஒப்பித்தல், பேச்சு, ஓவியம், இசை, விநாடி-வினா, திருக்கு ஒப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வென்றோருக்கு பள்ளிச் செயலா் ரத்தினராஜா, தலைமையாசிரியா் (பொறுப்பு) முத்துக்குமாா் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.
ஏற்பாடுகளை விவேகானந்த கேந்திர மாவட்டப் பொறுப்பாளா் பரமகுரு செய்திருந்தாா்.