செய்திகள் :

இலங்கையில் முக்கிய ஊழல் தடுப்பு மசோதா ஒரு மனதாக நிறைவேற்றம்!

post image

இலங்கை நாடாளுமன்றத்தில் முக்கிய ஊழல் தடுப்பு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் ஊழலை தடுக்கும் விதாமக கொண்டுவரப்பட்ட ஊழல் தடுப்பு குற்றவியல் மசோதாவை, இன்று (ஏப்.8) ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இணைந்து ஒருமனதாக வாக்களித்து நிறைவேற்றியுள்ளனர்.

இந்த மசோதாவைத் தாக்கல் செய்யும் போது அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் ஹர்ஷனா நானயக்கரா கூறுகையில், இதற்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற ஊழல்களினால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் நஷ்டமாகியுள்ளதாகவும் தற்போது இயற்றப்படும் இந்தச் சட்டத்தின் மூலம் அந்நாடு ஊழலிலிருந்து விடுவிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இத்துடன், இந்தப் புதிய சட்டத்தின் மூலம் இதற்கு முந்தைய அரசுகளின் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீதான குற்றச்சாட்டுக்களும் முறையாக விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டத்தின் மூலம் அந்நாட்டு அதிகாரிகளுக்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களைத் தேடி கண்டுபிடிப்பது, அவர்களது சொத்துக்களை முடக்குவது போன்ற அதிகாரங்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆளும் அரசு கொண்டு வந்த இந்தச் சட்டத்துக்கு ஆதரவளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தப் புதிய சட்டத்திற்கு தேவையான அடிப்படை வேலைகளை தங்களது ஆட்சியிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும், அரசு இந்தச் சட்டத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி பழிவாங்கும் செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, இதற்கு முந்தைய அரசுகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 3-க்கும் மேற்பட்டோர் ஊழல் வழக்கில் கைதாகி காவலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நேபாளத்தில் மன்னராட்சி ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி!

நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கம்!

நேபாளத்தில் 12 இந்தியர்கள் சென்ற தனியார் விமானம் அவசரமாக காத்மாண்டின் பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் உள்நாட்டில் பயணிக்க இயக்கப்படும் சீதா ஏர்லைன்ஸ் எனும் தனியார் நிறுவன... மேலும் பார்க்க

ஹரியாணாவில் அம்பேத்கர் சிலை உடைப்பு! 2 பேர் கைது!

ஹரியாணா மாநிலத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹிஸார் மாவட்டத்திலுள்ள நாங்தலா கிராமத்திலுள்ள ஓரு பூங்காவில் அம்பேத்கர் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இந்நிலையில், அம்பேத்... மேலும் பார்க்க

பாங்காக் சென்றதை மறைக்க கடவுச்சீட்டின் பக்கங்களைக் கிழித்த நபர் கைது!

மகாராஷ்டிரத்தின் மும்பை விமான நிலையத்தில் தனது கடவுச்சீட்டின் பக்கங்களைக் கிழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புணே மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் பாலேராவ் (வயது 51) என்ற நபர், கடந்த ஏப்.14 ஆம் தேதி மும்... மேலும் பார்க்க

இபிஎஸ் பெயருடன் வந்த மின்னஞ்சல் மூலம் கேரள அரசு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள மாநில பாலக்காடு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தின் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக இன்று (ஏப்.16) காலை வெடி... மேலும் பார்க்க

ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!

யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் முக்கிய இடங்களின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. யேமன் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள பல்வேறு மாகாணங்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையினரின்... மேலும் பார்க்க

ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடை நீக்கம்?

ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடையானது விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை ஆளும் தலிபான்கள் மீதானத் தடை நீக்கப்பட்டு அந்நாட்டுடனான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் முயற... மேலும் பார்க்க