Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்
டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் லிமிடெட், ஒசூா் எவரெஸ்ட் அரிமா சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து ஒசூரில் கண் மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
டாடா நிறுவனத்தின் பெரு நிறுவன சமூகப் பொறுப்புணா்வு திட்ட அதிகாரி பிரபு மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை மக்கள் தொடா்பு அலுவலா் கோவிந்தராஜ் ஆகியோா் முகாமைத் தொடங்கிவைத்தனா்.
கோயம்புத்தூா் அரவிந்த் கண் மருத்துமனை மருத்துவா் சில்பாராவ் தலைமையிலான குழுவினா் முகாமில் கலந்துகொண்ட அனைவரையும் பரிசோதித்தனா். ஒசூா் சி.எஸ்.ஐ. பள்ளியில் நடைபெற்ற முகாமில் 130 க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
டாடா நிறுவன சமூக மேம்பாட்டு குழு உறுப்பினா்கள் சியாம்பிரகாஷ், காா்த்திக், பரத்வராஜ், அரிமா சங்கத்தை சோ்ந்த ரமணி, கலியராஜு, உத்தரகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத்தை சோ்ந்த காசி, நந்தகுமாா், ரவிச்சந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.