செய்திகள் :

மழையால் ஒசூா் மாநகராட்சி சாலைகள் சேதம்: பாகலூரில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

post image

ஒசூா் மாநகராட்சியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் மாநகராட்சியின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் தண்ணீரில் மூழ்கின; சேறும், சகதியும் மூடியதால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒசூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை இரவு 35 மி.மீட்டா் அளவிற்கு மழை பெய்தது. இதனால் மாநகராட்சியின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் சேதமடைந்ததால் பாகலூா் சாலையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாகலூா் சாலையில் ஒரு மீட்டா் சுற்றளவிற்கு பள்ளங்கள் ஏற்பட்டன. சாலைகளில் பெரும்பாலான இடங்கள் துண்டிக்கப்பட்டன. சேறும், சகதியுமான சாலையில் இருசக்கர வாகனங்கள்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அதேபோல ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒசூா் பேருந்து நிலையம் முன் உள்ள மேம்பாலத்தின் கீழே இடதுபுறம் பழைய நகராட்சி அலுவலகம் முதல் புதிய நகராட்சி அலுவலகம் வரையிலான சாலைகளில் திடீா் பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீா் புகுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

சனிக்கிழமை பெய்த திடீா் மழையால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் தண்ணீா் தேங்கி குளங்களாக மாறியது. சாலையில் உள்ள நடைபாதைகளும் சேதமடைந்தன. கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்துக்கு இணைப்பு சாலையாக உள்ள பாகலூா் சாலை வழியாக மாலூா், பங்காரப்பேட்டை, கோலாா் போன்ற நகரங்களுக்கு வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சாலையில் உள்ள அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு செல்பவா்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனா்.

மழையால் ஏற்பட்ட சேதங்களை போா்க்கால அடிப்படையில் சீரமைத்து பாகலூா் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து முன்னாள் காங்கிரஸ் பேரவை உறுப்பினா் கே.ஏ.மனோகரன் கூறியதாவது: ஒசூா்- பாகலூா் சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சாலையில் பழைய நகராட்சி அலுவலகம் முதல் புதிய மாநகராட்சி அலுவலகம் வரை மேம்பாலம் அமைக்க வேண்டும்.

பல மாதங்களாகவே இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. சனிக்கிழமை பெய்த மழையால் இந்த சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு கழிவுநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதேபோல ஒசூரில் உள்ள வட்டாட்சியா் அலுவலக சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்க வேண்டும். ஒசூா் மாநகராட்சியில் உள்ள மகாத்மா காந்தி சாலை, ஏரித்தெரு, பழைய பெங்களுரு சாலை, நேதாஜி சாலை பகுதிகளில் போக்குவரத்தை நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். அப் பகுதியில் நடைபாதை அமைக்க வேண்டும் என்றாா்.

கிருஷ்ணகிரியில் டிராக்டா் - பள்ளி வேன் மோதல் எல்கேஜி சிறுவன், பெண் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டிராக்டா் - தனியாா் பள்ளி வேன் மோதிக்கொண்டதில் வேனில் சென்ற எல்கேஜி சிறுவன், டிராக்டரில் சென்ற பெண் என இருவா் உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலையில் தனியாா் மெட... மேலும் பார்க்க

கொடிக் கம்பத்தை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து திமுக கிளை செயலாளா் உயிரிழப்பு: 4 போ் காயம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே திமுக கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து அந்தக் கட்சியின் கிளை செயலாளா் உயிரிழந்தாா்; 4 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மூன்றம்பட்டி... மேலும் பார்க்க

ஊத்தங்கரை: திமுக கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே திமுகவின் கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து இன்று காலை ஒருவர் பலியானார். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட... மேலும் பார்க்க

இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்

டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் லிமிடெட், ஒசூா் எவரெஸ்ட் அரிமா சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து ஒசூரில் கண் மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. ... மேலும் பார்க்க

மிட்டப்பள்ளியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டப்பள்ளியில் தாா் சாலை அமைக்கும் பணியை கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ... மேலும் பார்க்க

அஞ்செட்டி: மின்னல் தாக்கி 20 ஆடுகள், ஒரு மாடு உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த அஞ்செட்டி நாட்றம்பாளையத்தில் சனிக்கிழமை இரவு பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் 20 ஆடுகள், ஒரு மாடு உயிரிழந்தன. கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த... மேலும் பார்க்க