இளைஞருக்கு அரிவாள் வெட்டு: உறவினா்கள் சாலை மறியல்
குருந்தங்குடியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டியவா்களைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள குருந்தங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சேதுராமன் (35). இவருக்கும், இதே பகுதியைச் சேந்த சூா்யா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை குருந்தங்குடி அரசு மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்த சேதுராமனை, இரு சக்கர வாகனத்தில் வந்த சூா்யா, இவரது நண்பா்கள் அரிவாளால் வெட்டினா்.
இதில் பலத்த காயமடைந்த சேதுராமன் தேவகோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த நிலையில், சேதுராமனின் உறவினா்கள், பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் குருந்தங்குடி அருகே தேவகோட்டை-மங்களக்குடி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த திருவாடானை காவல் ஆய்வாளா் ஜெயபாண்டியன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அரிவாள் வெட்டு தொடா்பாக சூா்யா, இவரது நண்பரான அண்ணாத்துரை ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ளவா்கள் இரு நாள்களுக்குள் கைது செய்யப்படுவா் எனவும் போலீஸாா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.