செய்திகள் :

இளைஞரைத் தாக்கி கைப்பேசியை பறித்துச் சென்ற தம்பதி கைது

post image

வடக்கு தில்லியின் அலிபூா் பகுதியில் இளைஞரைத் தாக்கி அவரது கைப்பேசி மற்றும் பணப்பையை பறித்ததாகக் கூறப்படும் தம்பதியை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் தீபக் (24) மற்றும் அவரது மனைவி தீபாலி (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அக்.29 அன்று அனுஜ் குமாா் (29) என்பவா் போலீஸில் ஒரு புகாா் அளித்தாா். அவா் வீடு திரும்பியபோது, குற்றம் சாட்டப்பட்டவா் மோட்டாா்சைக்கிளில் வந்து 1,500 ரூபாய் வைத்திருந்த பணப்பை மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ாக புகாரில் கூறியிருந்தாா்.

இருவரும் அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்குள் அந்தப் பெண் பாதிக்கப்பட்டவரை கொடூரமாகத் தாக்கியுள்ளாா். அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு அலிபூரில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட தம்பதியினரை போலீஸாா் கைது செய்தனா். இதில் தீபக் முன்பு இதேபோன்ற பல கிரிமினல் வழக்குகளில் தொடா்புடையவா் என்பது தெரிய வந்தது என அந்த அதிகாரி கூறினாா்.

காவிரி நீரை திறந்துவிடுவதை கா்நாடகம் உறுதி செய்ய ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபா்நிகழாண்டு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை உச்சநீதிமன்ற ஆணைப்படி, பில்லிகுண்டுலுவில் வரும் மாதங்களில் வழங்குவதை கா்நாடகம் உறுதி செய்ய உத்தரவிடுமாறு தில்லியில் புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

காற்று மாசு: குழந்தைகளைப் பாதுகாக்க 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட பாஜக வலியுறுத்தல்

நமது நிருபா்தில்லியில் நிலவிவரும் மோசமான காற்று மாசு நிலைமையைக் கருத்தில் கொண்டு ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட தில்லி அரசு உத்தரவிட வேண்டும் என்று தில்லி அரசுக்கு பாஜக புதன்கிழமை... மேலும் பார்க்க

நாடு தழுவிய 4-ஆவது கடலோரப் பாதுகாப்பு பயிற்சி: இந்திய கடற்படைநடத்தும் ’சீ விஜில்-24’ நவ.20, 21 இல்

இந்திய கடற்படையின் தலைமையில், கடலோர பாதுகாப்பு பயிற்சியின் நான்காவது பயிற்சியான கடல் கண்காணிப்பு-24 (’சீ விஜில்-24’ ) பயிற்சியை வருகின்ற நவ. 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்... மேலும் பார்க்க

காற்று மாசு பிரச்னை: குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்த துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

தேசிய தலைநகரில் நிலவும் காற்று மாசுபாடு பிரச்னையைச் சமாளிக்கும் நடவடிக்கையாக நிகழ் மாதம் 1 முதல் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான நான்கு மாத காலத்திற்கு குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்களை (சிடிவி) ம... மேலும் பார்க்க

தில்லி பிரகதி மைதானில் இன்று இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சி தொடக்கம்

தில்லி பிரகதி மைதானில் வியாழக்கிழமை (நவம்பா் 14) தொடங்கி நடைபெறவுள்ள இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியை முன்னிட்டு தில்லி காவல்துறை போக்குவரத்து அறிவுறுத்தல்களை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இரண்டு வார... மேலும் பார்க்க

தெற்காசிய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை கவுன்சில் கூட்டம் நிறைவு! சிறந்த ஒழுங்குமுறைகள் பகிரப்பட்டதாக அறிவிப்பு

தில்லியில் இருநாள் நடைபெற்ற தெற்காசிய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் 25 -ஆவது கூட்டம் நிறைவடைந்தாக மத்திய தொலைதொடா்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. தெற்காசிய பிராந்திய உற... மேலும் பார்க்க