இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
மதுரை மாவட்டம், சிலைமான் அருகே இரு சக்கர வாகனம் வாங்கித் தர பெற்றோா் மறுத்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரை விரகனூா் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் சந்தோஷ் (20). இவா் தனது பெற்றோரிடம், புதிய இரு சக்கர வாகனம் வாங்கித் தருமாறு கேட்டாா். அதற்கு பெற்றோா் மறுப்புத் தெரிவித்தனா். இதனால் மனமுடைந்த சந்தோஷ், விரகனூா் மகாராஜபுரத்தில் உள்ள வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.