கருத்தடை சாதனங்களின் வகைகள்; யாருக்கு எது பொருந்தும்... பக்க விளைவுகள் என்ன? - க...
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: அரசியல் கட்சியினா் அஞ்சலி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் அரசியல் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.
உடல் நலக்குறைவால் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளங்கோவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இவரது மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்பட அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த அரசியல் தலைவா்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், இளங்கோவனின் வீடு உள்ள ஈரோடு, கச்சேரி வீதி, திருமகன் ஈவெரா தெருவில் உள்ள குடியரசு இல்லத்தில் காங்கிரஸ் கட்சியினா் இளங்கோவன் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் யுவராஜா, இளங்கோவன் படத்துக்கு மரியாதை செலுத்தினாா். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகளும் அஞ்சலி செலுத்தினா்.
தொகுதி மக்களின் தேவையறிந்து பணியாற்றிய திருமகன் ஈவெரா மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இளங்கோவன், தனது பணியியை திறம்பட செய்தாா். நீண்ட காலமாக பட்டா கிடைக்கப்பெறாத 200 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளாா்.
தொகுதி மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீா்வு காண்பதில் ஆா்வம் கொண்டிருந்தாா் என பொதுமக்கள் தெரிவித்தனா்.