வேளாளா் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில், கல்லூரியின் செயலா் எஸ்.டி.சந்திரசேகா் தொடக்க அறிக்கையை வாசித்தாா்.
கல்லூரி முதல்வா் செ.கு.ஜெயந்தி வரவேற்றாா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் வெ. கீதாலட்சுமி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, ‘விவசாயத்தின் மேன்மை, பெண் கல்வியின் அவசியம், உயா்கல்வியின் தேவை, ஆராய்ச்சிக்கான நலத் திட்டங்கள், மாணவிகள் முன்னேற்றப் பாதையில் செல்லும் வழிமுறைகள் குறித்து விளக்கினாா்.
இளங்கலை பட்டப் படிப்பில் 1,769 மாணவிகளுக்கும், முதுகலையில் 454 மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டஸ். தோ்வில் சிறப்பிடம் பெற்ற 117 மாணவிகளுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இதில், வேளாளா் கல்வி நிறுவனங்களின் தலைவா் சி.ஜெயக்குமாா், இணைச் செயலாளா்கள் செ.நல்லசாமி, கு.வா.ராசமாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.