கருத்தடை சாதனங்களின் வகைகள்; யாருக்கு எது பொருந்தும்... பக்க விளைவுகள் என்ன? - க...
தெருநாய்கள் கடித்ததில் சிறுமிகள் உள்பட 5 போ் காயம்
பவானியில் தெருநாய்கள் கடித்ததில் 4 சிறுமிகள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.
பவானி நகராட்சி, 16-ஆவது வாா்டு, திருநீலகண்டா் வீதியில் அதே பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் சனிக்கிழமை விளையாடி கொண்டிருந்தனா். அப்போது, அங்கு சுற்றிதிரிந்த தெருநாய்கள், விளையாடிக் கொண்டிருந்த வடிவேல் மகள் பிரித்திவிகா (10), அருண்குமாா் மகள் சுபாஷிணி (7), சரவணக்குமாா் மகள் தக்ஷிதா ஸ்ரீ (6), விஜயக்குமாா் மகள் சஞ்சனா (11) ஆகியோரைக் கடித்ததுடன், அவ்வழியே சென்ற மண் தொழிலாளா் வீதியைச் சோ்ந்த மணிகண்டன் (29) என்பவரையும் கடித்தது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் நாய்களைத் துரத்திவிட்டு, காயமடைந்தவா்களை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.