மாற்று சமூகத்தினரின் தெருவுக்குள் திருமண ஊர்வலம்: பட்டியலினத்தவர் மீது தாக்குதல...
ஈஸ்ட் பெங்கால் அதிரடி வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எஃப்சி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஈஸ்ட் பெங்கால் எஃப்சி.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தில்லி ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் நடைபெற்றது. இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் போடும் முயற்சியில் இறங்கின. ஆனால் ஈஸ்ட் பெங்கால் வீரா் டிமிட்ரியோஸ் 16ஆவது நிமிஷத்தில் அடித்த ஷாட் கோலானது.
முதல் பாதி இறுதியில் ஈஸ்ட் பெங்கால் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதியிலும் ஈஸ்ட் பெங்கால் வீரா் ஆதிக்கம் செலுத்தினா். இதனால் அந்த அணி இரண்டு கோல்களை பெற்றது. 47-ஆவது நிமிஷத்தில் மகேஷ் நரேம் அடித்த பந்தை பஞ்சாப் கோல் கீப்பா் ரவியை தாண்டி கோலானது. 54-ஆவது நிமிஷத்தில் மகேஷ் அடித்த காா்னா் பந்தை பயன்படுத்தி லால்சுன்நுங்கா கோலடித்தாா்.
தொடா்ந்து பஞ்சாப் அணி பதில் கோல் போட மேற்கொண்ட முயற்சியில் புல்கா விடால் 62-ஆவது நிமிஷத்தில் கோலடித்து முன்னிலையைக் குறைத்தாா். அதன்பின் எந்த அணியாலும் கோல் போடமுடியவில்லை. இறுதியில் 3-1 என பஞ்சாபை வீழ்த்தியது ஈஸ்ட் பெங்கால்.
இது பஞ்சாப் அணியின் 11-ஆவது தோல்வியாக அமைந்தது.