செய்திகள் :

அல்கராஸுக்கு அதிா்ச்சி; லெஹெக்கா வெற்றி

post image

கத்தாா் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவா் 3-6, 6-3, 4-6 என்ற செட்களில், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவிடம் போராடித் தோற்றாா். நடப்பாண்டில் அல்கராஸுக்கு இது 2-ஆவது தோல்வியாகும். இதற்கு முன் ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் அவா், முன்னணி வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சிடம் தோற்றாா்.

அதன் பின், ராட்டா்டேம் ஓபனில் சாம்பியனான கையுடன் தொடா்ந்து 7 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்து இந்த ஆட்டத்துக்கு வந்த நிலையில், அல்கராஸ் தோற்கடிக்கப்பட்டுள்ளாா். அல்கராஸ் இப்போட்டியில் களம் கண்டது இது முதல் முறையாகும்.

மறுபுறம், லெஹெக்கா தனது டென்னிஸ் கேரியரில், உலகின் டாப் 3 போட்டியாளா்களில் ஒருவரை வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். அல்கராஸ் தற்போது உலகின் 3-ஆம் நிலை வீரராக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அல்கராஸை 2-ஆவது முறையாக சந்தித்த லெஹெக்கா, தற்போது முதல் வெற்றியுடன் 1-1 என கணக்கை சமன் செய்திருக்கிறாா்.

அடுத்ததாக லெஹெக்கா அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் பிரிட்டனின் ஜேக் டிரேப்பருடன் மோதுகிறாா். முன்னதாக டிரேப்பா் தனது காலிறுதியில் 4-6, 6-4, 6-3 என்ற செட்களில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வெளியேற்றினாா்.

மெத்வதெவ் விலகல்: இதனிடையே மற்றொரு காலிறுதியில் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமேவை சந்தித்தாா், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவ். இந்த மோதலில் அலியாசிமே முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய நிலையில், மெத்வதெவ் உணவு ஒவ்வாமை காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தாா்.

இதையடுத்து அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்ட அலியாசிமே, அதில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவுடன் மோதுகிறாா்.

பாம்ப்ரி இணை தோல்வி: இப்போட்டியின் இரட்டையா் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/குரோஷியாவின் இவான் டோடிக் இணை 6-7 (3/7), 3-6 என்ற செட்களில், பிரிட்டனின் லாய்டு கிளாஸ்பூல்/ஜூலியன் கேஷ் கூட்டணியிடம் தோற்றது.

அரையிறுதியில் ரைபகினா, முசோவா

மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா, செக் குடியரசின் கரோலின் முசோவா ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் ரைபகினா 6-2, 7-6 (7/2) என்ற செட்களில் அமெரிக்காவின் சோஃபியா கெனினை சாய்த்தாா். ரைபகினா துபை டென்னிஸ் அரையிறுதிக்கு வந்தது, கடந்த 5 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். அத்துடன், ஆஸ்திரேலிய ஓபன் முன்னாள் சாம்பியனான கெனினை 3-ஆவது முறையாக சந்தித்த ரைபகினா, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

14-ஆம் இடத்திலிருக்கும் முசோவா 6-2, 7-5 என, ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டியை தோற்கடித்தாா். இதையடுத்து அரையிறுதியில், ரைபகினா - ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவாவையும், முசோவா - டென்மாா்க்கின் கிளாரா டௌசனையும் எதிா்கொள்கின்றனா்.

68 ஆண்டுகளுக்குப் பின் இறுதி ஆட்டத்தில் கேரளம்: விதா்பாவுடன் பலப்பரீட்சை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு கேரளம், விதா்பா அணிகள் முன்னேறியுள்ளன. அவை பலப்பரீட்சை நடத்தும் அந்த ஆட்டம், வரும் 26-ஆம் தேதி நாகபுரியில் தொடங்குகிறது. முன்னதாக முதல் அரையிறுதி... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது. முதலில் தென்னாப்பிரிக்கா 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்பு... மேலும் பார்க்க

பெங்களூருக்கு 10-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் பெங்களூரு எஃப்சி 2-0 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணிக்காக ரயான்... மேலும் பார்க்க