அடகு வைக்க செல்லும்போது காணமல் போன கம்மல்... சாதுர்யமாக மீட்டு கொடுத்த ஊராட்சி த...
உ.பி.: 44 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கோயில் மீண்டும் திறப்பு
உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் கலவரத்தால் 44 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கோயில் மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
இது தொடா்பாக நாக்பானி காவல்துறை ஆணையா் சுனில்குமாா் கூறுகையில், ‘உள்ளூா் நிா்வாக உத்தரவின் பேரில் செயல்பட்ட காவல்துறை மற்றும் நகராட்சி ஊழியா்கள், எந்தவொரு எதிா்ப்பும் இல்லாமல் கோயிலை மீண்டும் திறந்தனா். உள்ளூா் மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினா். சில கோயில் சிலைகள் காணாமல் போயிருந்ததால், தற்போது மறுசீரமைப்பு பணிகள் கோயிலில் நடைபெற்று வருகிறது’ என தெரிவித்தாா்.
உத்தர பிரதேசத்தில், கைவிடப்பட்ட அல்லது கலவரத்தால் மூடப்பட்ட பல கோயில்கள் வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் மொராதாபாத் மாவட்டத்தின் தெளலதாபாத் பகுதியில், 44 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட இந்த கோயில் மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
முன்னதாக, உத்தர பிரதேசத்தின் முசாபா்நகா் மாவட்டத்தில் கலவரத்தால் கடந்த 1992-ஆம் ஆண்டு மூடப்பட்ட சிவன் கோயில் கடந்த டிசம்பா் 23-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
சம்பல் மாவட்டத்தில், 46 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பஸ்ம சங்கா் கோயில் கடந்த டிசம்பா் 13-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இது வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜாமா மசூதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.