செய்திகள் :

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: திருப்பூா் தெற்கு வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் திருப்பூா் தெற்கு வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையிலான அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்தில் கள ஆய்வு செய்து வருகின்றனா்.

அதன்படி, திருப்பூா் தெற்கு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

முதலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிச் சீட்டு வழங்குமிடம், மருத்துவா் அறை, புறநோயாளிகள் பிரிவு, கட்டு கட்டும் அறை, உள்நோயாளிகள் பிரிவு, தொற்றா நோய் பிரிவு ஆகிய பகுதிகளை ஆய்வு செய்த ஆட்சியா், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள் இருப்பு குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். பின்னா், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகத்தை வழங்கினாா்.

விஜயாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.70 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டடங்கள், நாச்சிபாளையம் ஊராட்சி, ரங்கம்பாளையம் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், அவா்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், திருப்பூா் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உதயகுமாா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் ஆ.பழனிசாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் குமாரராஜா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரியாஷ் அகமது பாஷா, மாவட்ட மேலாளா் (தாட்கோ) ரஞ்சித்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

வெள்ளக்கோவிலில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

வெள்ளக்கோவில் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சித் தலைவா் கனியரசி முத்துக்குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் முன்னிலை வகித்தா... மேலும் பார்க்க

பல்லடத்தில் 785 கிலோ குட்கா பறிமுதல்: 8 போ் கைது

பல்லடத்தில் 785 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்த போலீஸாா் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரைக் கைது செய்தனா். கேரளத்தில் இருந்து பல்லடத்துக்கு குட்கா கடத்தி வருவதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடு... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி சிறப்பு முகாம்

பல்லடத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையா் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பல்லடம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மே... மேலும் பார்க்க

பல்லடம் அருகே கழிவுகளைக் கொட்ட முயன்ற லாரி உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

பல்லடம் அருகே கழிவுகளை கொட்ட முயன்ற லாரியை சிறை பிடித்து அதன் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் இருந்து இரும்புக் கழிவுகள், துணிகள், சோபா உள்ளிட்ட கழிவுகளை ஏற்றிக்க... மேலும் பார்க்க

நீதிமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பிய நபரால் பரபரப்பு

திருப்பூா் நீதிமன்ற வளாகத்தில் நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பிய நபரால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. பல்லடம் அருகே உள்ள நாரணாபுரத்தைச் சோ்ந்தவா் பாபா பக்ருதீன் (44). இவா், திருப்பூரில் உள்ள மாவட்ட... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.9.55 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 144 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திரு... மேலும் பார்க்க