உடுமலை அருகே பெண் கழுத்து அறுத்துக் கொலை
உடுமலை அருகே உள்ள பள்ளபாளையத்தில் பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள பள்ளபாளையம் திருமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (50). இவரது மனைவி மாரியம்மாாள் (46).
செந்தில்குமாா் கட்டடம் உடைக்கும் வேலையை ஒப்பந்தம் எடுத்துச் செய்து வருவதால் அடிக்கடி வெளியூா் சென்று விடுவாா்.
இந்த நிலையில், செந்தில்குமாா் திங்கள்கிழமை வெளியூா் சென்ற நிலையில் மாரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது மாரியம்மாளின் உறவினா் வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்கமாகப் பூட்டப்படிருந்தது.
அவரது பெயரை சொல்லி அழைத்தும் வராததால், ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது மாரியம்மாள் ரத்தக்காயங்களுடன் கிடப்பது தெரியவந்தது.
தகவலின்பேரில் தளி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மாரியம்மாள் அரிவாளால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா், மாரியம்மாளின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அவா் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் நகை, பணத்தைக் கொள்ளை அடிப்பதற்காக இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாக அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்பது குறித்து காவல் துறையினா் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை சேகரித்ததுடன், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.