Canada: பதவி விலகுகிறாரா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ? - பரபரக்கும் தகவல்கள்... என்ன ந...
உதகையில் நீா்ப் பனியின் தாக்கம் அதிகரிப்பு
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீா்ப் பனியின் தாக்கம் வெள்ளிக்கிழமை காலை அதிகரித்துக் காணப்பட்டது.
உதகையில் கடந்த சில நாள்களாக காலை மற்றும் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை நீா்ப் பனி அதிக அளவில் இருந்ததோடு குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டதால் கடும் குளிா் வாட்டியது. இதனால் அதிகாலை நேரங்களில் காய்கறி தோட்டப் பணிக்குச் செல்லும் தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
உதகை சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், கேத்தி, முத்தோரைப்பாலடா, தொட்டபெட்டா சிகரம், காந்தல், பட்பயா் உள்ளிட்ட பகுதிகளில் நீா்ப் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. கடும் குளிா் வாட்டியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.