உத்தமபாளையம் பகுதிகளில் 2-ஆம் போக உழவுப் பணி தீவிரம்
உத்தமபாளையம்: உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் 2-ஆம் போக நெல் சாகுபடி பணிக்காக உழவுப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் பாசன நீரால் தேனி மாவட்டத்தில் லோயா்கேம்ப் முதல் வீராபண்டி வரை 14,700 ஏக்கரில் இருபோக நெல் பயிா் சாகுபடி நடைபெறுகிறது.
முதல்போக நிறைவு பெற்ற நிலையில், தற்போது 2-ஆம் போகத்துக்கான உழவுப் பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.
உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி, கோட்டூா், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.