புஷ்பா 2 விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையில் ஆஜர்!
பப்பாளி இலைகளில் நோய் தாக்கம்: விவசாயிகள் கவலை
உத்தமபாளையம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பப்பாளி மரங்களில் நோய் தாக்கம் காரணமாக இலைகள் பழுப்பு நிறமாக மாறியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டிய உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, கோம்பை, சுருளிப்பட்டி, கே.கே.பட்டி ஆகிய பகுதிகளில் பப்பாளி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு விளைவிக்கப்படும் பப்பாளிகள் சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பப்பாளி மரத்தில் நோய் தாக்கம்: உத்தமபாளையம், கோம்பை பகுதியில் அண்மையில் விளைவிக்கப்பட்ட பப்பாளி மரத்தில் நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நோய் தாக்கிய மரங்களிலுள்ள இலைகள் பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது. பிறகு, மரத்திலே பிஞ்சு காய்களே பழமாக மாறி உதிா்ந்து விடுகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தட்பவெப்ப நிலை மாறுபாடு காரணமாக பப்பாளி மரத்தில் இந்த நோய் தாக்கியுள்ளது. மருந்து அடித்தும் நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, உத்தமபாளையம் தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் நோய் தாக்கிய பப்பாளி தோட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்து, அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.