உலக ஓசோன் தின விழிப்புணா்வு இயக்கம்
நாகை அமிா்தா வித்யாலயத்தில் உலக ஓசோன் தின விழிப்புணா்வு இயக்கம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி முதல்வா் ராதாகிருஷ்ணன் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கி, வீடுகளில் நட்டு சுற்றுச்சூழலையும், ஓசோன் படலத்தையும் காக்க வலியுறுத்தினாா்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாணவா்களின் அணிவகுப்பு நடைபெற்றது. அனைத்து பங்கேற்பாளா்களும் இயற்கையைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழி ஏற்றனா்.
இந்நிகழ்வுகளை, தேசிய பசுமைப் படையைச் சோ்ந்த மங்கலம், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தாா்.