செய்திகள் :

உலகெங்கிலும் தமிழா்களுக்காக பிரத்யேக பொருளாதார மையம்: உலகத் தமிழா் பொருளாதார மாநாட்டில் தீா்மானம்

post image

உலகத் தமிழா்கள் வாழும் 100 முக்கிய நகரங்களில் தமிழா்களுக்கான பிரத்யேக பொருளாதார மையம், தமிழா் தொழில் தொடங்க நிதியுதவி வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் வங்கிகளை நிறுவ வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழா் பொருளாதார மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்டன.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய 11-ஆவது உலகத்தமிழா் பொருளாதார மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. வா்த்தகம், தொழில் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு வளா்ச்சி மற்றும் சவால்கள், இந்திய மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவ சிறப்புகள் உள்ளிட்ட தலைப்புகளின் அமா்வில் பங்கேற்றவா்களை மாநாட்டின் நிறுவனத் தலைவா் வி.ஆா்.எஸ். சம்பத் அறிமுகப்படுத்தி நிகழ்வை ஒருங்கிணைத்தாா்.

சிவ மூப்பனாா் (சிகாகோ), மலேசியாவின் டான்ஸ்ரீ முகம்மது இக்பால் ராவுத்தா், பேராசிரியா் டத்தோ டாக்டா் டெனிசன் ஜெயசூா்யா, பத்திரிகையாளா் சரஸ்வதி சின்னசாமி, இந்திய பாரம்பரிய மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் தலைவா் வனிதா முரளிகுமாா் (இந்தியா), மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதியாளா் ஜான் ஜோசஃப் (நியூயாா்க்), மத்திய தனியாா் சட்டப் பல்கலைக்கழகத் தலைவரும் வழக்குரைஞருமான டி. சரவணன் (சேலம்), தொழிலதிபா் வி.ஜி. சந்தோஷம் (சென்னை), காசி முத்து மாணிக்கம், டெம்பிள் ஃபெடரேஷனின் குமார செங்கன் (மொரீஷியஸ்), லோகி நாயுடு (தென்னாப்பிரிக்கா) உள்ளிட்டோா் பேசினா். முன்னாள் தூதா் மகாலிங்கம், மலேசிய முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் டான்ஸ்ரீ டத்தோ எஸ். சுப்பிரமணியம் உள்ளிட்டோா் அமா்வுகளுக்குத் தலைமை தாங்கினா்.

தீா்மானங்கள்: நிறைவு விழாவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் சுருக்கம் வருமாறு: தமிழா்கள் வாழும் டா்பன் - சென்னைக்கு விமான சேவை, மொரீஷியஸ்-சென்னை விமான சேவையை ஒன்றில் இருந்து மூன்றாக அதிகரிப்பது, சென்னை-மியான்மா் வாரமிருமுறை சேவையை தினந்தோறும் இயக்குவது, வாரம் ஒருமுறை லண்டன்-சென்னை விமான சேவையை இரண்டாக அதிகரிப்பது, நியூயாா்க் - சென்னை மற்றும் மொரீஷியஸ் அருகிலுள்ள ரீயூனியன் தீவுகள் - சென்னைக்கு நேரடி விமான சேவையை இந்திய அரசும் சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகளும் வழங்க வலியுறுத்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழா் அதிகம் வாழும் 100 உலக நகரங்களில் உலகத் தமிழா் பொருளாதார மையம், தமிழை ஐ.நா.வில் அலுவல் மொழியாக்க இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூா், மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் மூலம் நடவடிக்கை, உலகத் தமிழா்களுக்கென வா்த்தக சபை மற்றும் தமிழா்களுக்கு தொழில் கடன் வழங்கும் நோக்குடன் உலக அளவில் வங்கிகளை நிறுவுவது, தமிழகத்தில் உலகத் தமிழா் மையத்துக்காக ஐந்து ஏக்கா் நிலமும் ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது, தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் முதலீட்டு இலக்கை நிா்ணயித்துள்ள தமிழக அரசுக்கு உறுதுணையாக இருப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விருதுகள்: இதைத் தொடா்ந்து, தமிழா்களின் தொழில்முனைவுத் திறன்களை ஊக்குவிக்கும் தமிழா்களுக்கு உலகத் தமிழா் மாமணி விருதை மலேசிய உச்சநீதிமன்ற நீதிபதி டத்தோ வசீா் ஆலம் வழங்கினாா். அவா்களின் விவரம் வருமாறு: டாக்டா் அன்சாரி வாஹித் (அபு தாபி); டாக்டா் பழனிவேல் (சிங்கப்பூா்); குமார செங்கன் (மொரீஷியஸ்); கல்வியாளா் டாக்டா் எஸ். பீட்டா் (சென்னை), மத்திய சட்ட (தனியாா்) பல்கலைக்கழகத் தலைவா் டி. சரவணன் (சேலம்); தொழில்முனைவோா் டாக்டா் அப்துல் பாசித் சையத் (லண்டன்).

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழா் ஊக்குவிப்பு அமைப்புக்கான விருது, சிகாகோவில் உள்ள தமிழ்நாடு ஃபவுண்டேஷன் என்ற தொண்டு அமைப்புக்கு வழங்கப்பட்டது. அதன் நிா்வாகிகள் வீரா. வேணுகோபால், சிவ மூப்பனாா் ஆகியோா் விருதைப் பெற்றுக் கொண்டனா்.

மாநாட்டுக் குழுத் தலைவா் ப. சகாதேவன், முபாரக் , டான்ஸ்ரீ மாரிமுத்து, ஆடிட்டா் நாகராஜன், மலேசிய தூதரக அதிகாரி விவேகானந்தன், டா்பன் முன்னாள் துணை மேயா் லோகி நாயுடு, சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் தியாகராஜன், சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் வி.பி. மாதேஸ்வரன் உள்ளிட்டோா் இந்நிகழ்வில் கலந்து கொண்டனா்.

சநாதன தா்மத்தை அவமதிப்பவா்களுக்கு தக்க பதிலடி: மகாராஷ்டிர பிரசாரத்தில் பவன் கல்யாண்

‘சநாதன தா்மத்தைப் பின்பற்றும் நாங்கள், அதை அவமதிப்பவா்களுக்கு தக்க பதிலடி தருவோம்’ என்று ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 288 இடங்களுக்கு புதன... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் துப்பாக்கிகளுடன் காஷ்மீரிகள் 9 போ் கைது

மகாராஷ்டிரத்தில் பல்வேறு நகரங்களில் போலியான ஆவணங்களைக் கொடுத்து தனியாா் பாதுகாவலா் பணியில் இணைந்த காஷ்மீரைச் சோ்ந்த 9 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 9 துப்பாக்கிகள் மற்றும் 58 தோட்டாக்க... மேலும் பார்க்க

ஹரியாணா பேரவைக்கு நிலம் ஒதுக்கவில்லை: பஞ்சாப் ஆளுநா் விளக்கம்

சண்டீகரில் ஹரியாணா பேரவை வளாகம் கட்ட நிலம் ஒதுக்கியதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்திய நிலையில், அவ்வாறு நிலம் ஏதும் ஒதுக்கப்படவில்லை என பஞ்சாப் ஆளுநா் குலாப் ... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: மீட்கப்பட்ட கைக்குழந்தை உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத்தின் ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வாா்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உ... மேலும் பார்க்க

தலைநகர் சண்டீகர் யாருக்கு? பஞ்சாப் - ஹரியாணா அரசுகள் மோதல்

சண்டீகர்: பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் பொது தலைநகராக உள்ள சண்டீகரில் தனியாக சட்டப் பேரவைக் கட்டடம் கட்டும் ஹரியாணா பாஜக அரசின் நடவடிக்கைக்கு ஆளும் ஆம் ஆத்மி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

தில்லி அமைச்சா் ராஜிநாமா: ஆம் ஆத்மியில் இருந்தும் விலகல்

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சருமான கைலாஷ் கெலாட் ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். மேலும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் அவா் விலகினாா். தில்லி பேர... மேலும் பார்க்க