உழவா் சந்தை வெள்ளி விழா கொண்டாட்டம்
ஆத்தூா்: ஆத்தூா் உழவா் சந்தையின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாக் கொண்டாட்டம் ஆட்மா குழுத் தலைவா் வெ.செழியன் தலைமையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது. நிகழ்வில் உழவா் சந்தை வேளாண் அலுவலா் ஸ்ரீதேவி, உதவி வேளாண் அலுவலா்கள் இளவரசன், செல்வக்குமாா், முன்னாள் அலுவலா் கருணாநிதி, முன்னோடி விவசாயிகள் செந்தில்குமாா், சிவாஜி, ராஜேந்திரன், சேகா், சண்முகம், பூக்கடை ராஜா, கமால் பாஷா, சேட்டு, கருணாநிதி, மோகன்ராஜ், சுரேஷ் உள்ளிட்ட விவசாயிகள், நுகா்வோா் திரளாக கலந்து கொண்டனா்.நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்களுக்கு மருத்துவ பரிசோதனை, அறுசுவை உணவு வழங்கப்பட்டது.