செய்திகள் :

ஊன்றுகோலுடன் இருந்தேன்..! காயத்திலிருந்து மீண்டது குறித்து ஷமி பேட்டி!

post image

ஒருநாள் உலகக் கோப்பை போட்டி 2023இல் விளையாடிய முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து வெளியேறினார்.

பின்னர் அறுவைச் சிகிச்சை செய்து 14 மாதங்கள் கழித்து உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். பிஜிடி தொடரில் தேர்வு செய்யவில்லை.

34 வயதாகும் முகமது ஷமி இங்கிலாந்துடனான டி20 தொடரில் கம்பேக் தந்தார். தற்போது பும்ரா இல்லாததால் ஷமி மட்டுமே மூத்த வீரராக இருக்கிறார்.

காயத்திலிருந்து மீண்டு வந்தது குறித்து ஐசிசிக்கு அளித்த பேட்டியில் ஷமி கூறியதாவது:

கடினமான முதலிரண்டு மாதங்கள்

உலகக் கோப்பையில் சிறப்பான ஃபார்மில் இருந்து திடீரென ஆபரேஷன் டேபிளில் இருந்ததை என்னால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகவும் கடினமாக இருந்தது.

முதலிரண்டு மாதங்கள் நான் மீண்டும் விளையாடுவேனா என்பதே சந்தேகமாக இருந்தது. பின்னர் 14 மாதங்கள் காலம் தாழ்ந்தது நம்மை நிலைகுலைய செய்யும்.

நான் மருத்துவரிடம் கேட்ட முதல் கேள்வி ‘நான் மீண்டும் களத்தில் செல்ல எத்தனை நாள்கள் ஆகும்’ என்பதுதான்.

களத்தில் எனது காலை வைத்ததுக்கு நான் எப்போதும் ஆச்சரியப்படுகிறேன். தொடர்ச்சியாக களத்தில் ஓடிக்கொண்டிருந்த ஒருவன் திடீரென ஊன்றுகோள் வைத்து இருந்தது கடினமாக இருந்தது.

முதலிரண்டு மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. அந்த நாள்கள் தன்னம்பிக்கையின்மையால் ஊர்ந்து சென்றன. நிறைய விஷயங்கள் எனது மனதில் ஓடின.

நாட்டுக்காக விளையாட வேண்டும்

என்னால் மீண்டும் விளையாட முடியுமா? நொண்டாமல் நடக்க முடியுமா? என பல கேள்விகள் எழுந்தன. 60 நாள்களுக்குப் பிறகு எனது கால்களை தரையில் வைத்தேன். நீங்கள் நம்பமாட்டீர்கள், நான் எப்போதை விடவும் அதிகமாக தரையில் கால் வைக்க பயந்தேன்.

எனக்கு குழந்தை முதலில் இருந்து நடப்பது போலிருந்தது. எதாவது நடந்துவிடுமா என மிகவும் பயந்தேன்.

தைரியமும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை மட்டுமே என்னை ஊக்கப்படுத்தியது. எந்தக் கசப்பும் இல்லாமல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தேன்.

நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற ஆர்வம் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது. வலிகள் இருந்தாலும் நான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன். எனது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே ஒரு உத்வேகம். ஒருமுறை விலகிவிட்டால் நீங்கள் யாரோ ஆகிவிடுவீர்கள் என்றார்.

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க

ரியான் ரிக்கல்டான் சதம், மூவர் அரைசதம்; ஆப்கானிஸ்தானுக்கு 316 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொட... மேலும் பார்க்க

மீண்டும் இந்திய அணியின் சீருடையில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்!

10 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட இடைவெளிக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் இருவரும் இந்திய அணியின் சீருடையில் களமிறங்கவுள்ளனர்.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 22... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: மீண்டும் அணியில் இணைந்த இங்கிலாந்து இளம் விக்கெட் கீப்பர்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து இளம்வீரர் ஜேமி ஸ்மித்துக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொ... மேலும் பார்க்க