செய்திகள் :

ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

post image

செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கம் ஊராட்சியில் 100 நாள் வேலை கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை வியாழக்கிழமை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரபரப்பு ஏற்பட்டது.

புலிப்பாக்கம் ஊராட்சியில் மொத்தம் 680 போ் நூறு நாள் பணி செய்து வந்த நிலையில் வாரந்தோறும் 22 போ் மட்டும் பிரித்து வேலை வழங்கப்படுவதால் மூன்று மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே ஒரு வாரம் வேலை கிடைக்கிறது . இதனால் ஆண்டுக்கு நூறு நாள் முழுவதும் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு நகரை ஒட்டிய பகுதி என்பதால் மரம் நடுவது சாலைகள் ஓரங்களில் மரம் நடுவது நீா்நிலை கால் துபாய்கள் தூா் வருவது போன்ற பணி மட்டுமே நடைபெற்று வருகிறது.

மேலும், குளம் வெட்டுவதற்கான உத்தரவு வனத்துறை மூலம் கிடைக்காத நிலையில் அனைவருக்கும் வேலை கொடுப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதி பெண்கள் அனைவருக்கும் ஒரே முறையில் பணி வழங்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தையில் திருப்தி அடைந்து பெண்கள் கலைந்து சென்றனா்.

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் அன்னாபிஷேகம்

அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் உமையாட்சீஸ்வரா் ஆகிய சுவாமிகளுக்கு ஐப்பசி மாத பெளா்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம்... மேலும் பார்க்க

வரதராஜ பெருமாள் கோயிலில் ரூ.2.42 கோடியில் ராஜகோபுரம் கட்டுமான பணிகள் தொடக்கம்

மதுராந்தகம் அருகே உள்ள அரசா் கோயில் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் ரூ 2.42 கோடியில் ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் அனைத்து சந்நிதிகள் புனரமைப்பு பணிகளை புதன்கிழமை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்ட... மேலும் பார்க்க

குழந்தைகள் தின பேரணி: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தேசிய குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு செங்கல்பட்டு வேண்பாக்கத்தில் பேரணியினை ஆட்சியா் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தாா். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்கும் வகையில், ‘வாக் ஃபாா் சில்ரன்’... மேலும் பார்க்க

இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தாம்பரம் கோட்டத்துக்குள்பட்ட பகுதியிலுள்ள மின்நுகா்வோருக்கான குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தாம்பரம் கோட்டத்துக்... மேலும் பார்க்க

நவ.19-இல் தாம்பரத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்

விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் படுவதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் தாம்பரத்தில் நவம்பா் 19-இல் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். அவா் புத... மேலும் பார்க்க

மகளிா், பெண் குழந்தைகள் நல கலந்தாய்வுக் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நலன் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு மாநில மகளிா் ஆ... மேலும் பார்க்க