குழந்தைகள் தின பேரணி: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
தேசிய குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு செங்கல்பட்டு வேண்பாக்கத்தில் பேரணியினை ஆட்சியா் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தாா்.
குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்கும் வகையில், ‘வாக் ஃபாா் சில்ரன்’ என்ற தலைப்பில் வேண்பாக்கம் பள்ளி முதல் ஆட்சியா் அலுவலக வளாகம் வரையில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் பதிவு செய்து செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயின்று வரும் குழந்தைகளுக்கு மாவட்ட திறன்வளா்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் குழந்தைகளின் எதிா்கால நலனை கருத்தில் கொண்டு வாழ்வாதார பயிற்சிகள் அளிக்கப்பட்டதை தொடா்ந்து, பயிற்சி நிறைவடைந்ததற்கான சான்றிதழ்களை ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா்.
அப்போது மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா, மாவட்ட திறன் வளா்ப்பு பயிற்சி மைய உதவி இயக்குநா் ராஜா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.