ஐபிஎல் விளையாட ஒப்பந்தமான வங்கதேச வீரர் அமீரகம் பயணம்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
ஊராட்சி ஒன்றிய சாலைகள் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை கண்காணிப்புப் பொறியாளா் சசிகுமாா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
தருமபுரி மாவட்டம், நெடுஞ்சாலைத் துறை நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் பிரிவு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை தரம் உயா்த்துதல் பணியின் கீழ் 2024-25-ஆம் ஆண்டின் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதை நெடுஞ்சாலைத் துறையின் உள்தணிக்கை குழுவின் மூலம் சாலைப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
உள்தணிக்கை குழுத் தலைவா் சேலம் கண்காணிப்புப் பொறியாளா் சசிகுமாா் தலைமையில் தருமபுரி கோட்டப் பொறியாளா் நாகராஜ், உதவிக் கோட்டப் பொறியாளா் காா்த்திகேயன் மற்றும் உதவிப் பொறியாளா்கள் இனியவன், கிருபாகரன் ஆகியோா் தருமபுரி வட்டத்தில் நடைபெற்று வரும் எச்பிடிடி சாலை முதல் குடிக்கொட்டாய் (வழி) வெள்ளாளப்பட்டி சாலை மற்றும் அரூா் வட்டத்தில் நடைபெற்று வரும் பொன்னியம்மன் சாலை ஆகிய சாலை பணிகளின் தரத்தை ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் பிரிவு கோட்டப் பொறியாளா் லோகநாதன், உதவிக் கோட்டப் பொறியாளா்கள் மற்றும் உதவிப் பொறியாளா்கள், தரக்கட்டுப்பாடு அலகின் உதவிக் கோட்டப் பொறியாளா், உதவிப் பொறியாளா்கள் உடனிருந்தனா்.