Ukraine: துருக்கி சென்றடைந்த ஜெலன்ஸ்கி; நேரில் வராத புதின் - அமைதி பேச்சுவார்த்த...
அரூா் அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை
அரூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் (பொறுப்பு) குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அரூா் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகள் பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வரலாறு, பி.எஸ்ஸி. தாவரவியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன. இந்த பாடப் பிரிவுகளுக்கு மே 27-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
அரூா் அரசு கல்லூரி வளாகத்தில் மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியே இலவசமாக விண்ணப்பிக்கவும் வகையில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.