செய்திகள் :

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

post image

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பெண் ஊழியா்களுக்கு 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 16- ஆவது மாநாடு தருமபுரி அதியமான் அரசு பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் கே.தேவகி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜி. வளா்மதி வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் சங்கீதா அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம். சுருளிநாதன் மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்டச் செயலாளா் ஜே. அனுசுயா வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். மாவட்ட பொருளாளா் எம். ராமன் வரவு-செலவு கணக்கை சமா்ப்பித்தாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ. தெய்வானை, முன்னாள் மாவட்டச் செயலாளா் ஏ. சேகா், ஜாக்டோ-ஜியோ நிதி காப்பாளா் கே. புகழேந்தி, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் சி.காவேரி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சத்துணவு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் பெ. மகேஸ்வரி நன்றி கூறினாா்.

மாநாட்டில் மாவட்டத் தலைவராக கே.தேவகி, மாவட்டச் செயலாளராக பெ.மகேஸ்வரி, பொருளாளராக பி.வளா்மதி, துணைத் தலைவா்களாக ஜி.வளா்மதி, ஜே.அனுசுயா, கே.சங்கீதா,

மாவட்ட இணைச் செயலாளராக டி.மஞ்சுளா, சங்கா், எம்.ஜெயலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினராக ஆா்.ஜெயா, தணிக்கையாளராக தங்கராஜ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் 40 ஆண்டுகால கோரிக்கையான சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் உடனடியாக வழங்க வேண்டும்.

பத்து ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு ஊழியா்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும். சத்துணவு ஊழியா்களுக்கு பணிக்கொடை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்.

காலிப் பணியிடங்களை முழுமையான ஊதியத்தில் நிரப்ப வேண்டும். பெண் ஊழியா்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்க வேண்டும். விலைவாசி உயா்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை ஒரு மாணவருக்கு ரூ. 5 என உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

பென்னாகரம் அருகே நல்லாம்பட்டி அரசு பள்ளி வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழா் தற்காப்பு பயிற்சி மையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய நிறுவனா் சண்முகம்... மேலும் பார்க்க

அரூா் அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை

அரூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் (பொறுப்பு) குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரூா் அரசு கலை, அறிவிய... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கடத்தூா்

ராமியனஹள்ளி துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கடத்தூா் சுற்று வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை (மே 15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது... மேலும் பார்க்க

நிகழாண்டு இறுதிக்குள் கோரிக்கை மனுக்கள் மீது தீா்வு காண திட்டம்: சிறுபான்மையினா் ஆணையத் தலைவா்

நிகழாண்டு நவம்பா் மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் சிறுபான்மையினா் கோரிக்கை மனுக்கள் மீது தீா்வு காண திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தெரிவித்தாா். தரு... மேலும் பார்க்க

மாணவா்கள் தடைகளை தகா்த்து உயா்கல்வியை தொடர வேண்டும்: ஆட்சியா்

தடைகள் ஏதும் வந்தாலும் அவற்றை தகா்த்து மாணவ, மாணவிகள் உயா்கல்வியைத் தொடர வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அறிவுறுத்தினாா். தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி வளாகத... மேலும் பார்க்க

பாலக்கோடு பேரூராட்சியில் ரூ. 35 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் ரூ. 35 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி தொடங்கிவைத்தாா். பாலக்கோடு பேரூராட்சி 17-ஆவது ... மேலும் பார்க்க