பாலக்கோடு பேரூராட்சியில் ரூ. 35 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் ரூ. 35 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி தொடங்கிவைத்தாா்.
பாலக்கோடு பேரூராட்சி 17-ஆவது வாா்டில் 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டம் மற்றும் பொது நிதி ரூ. 35 லட்சம் மதிப்பில் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி பங்கேற்று பணியைத் தொடங்கி வைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் இந்துமதி, பேரூராட்சி மன்ற உறுப்பினா் வகாப்ஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.