செய்திகள் :

எதிர்ப்புகளை எல்லாம் தவிடு பொடியாக்கும் ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்! - நீங்களும் சங்கல்பியுங்கள்

post image

ஸ்ரீஅக்ஷர செல்வ லலிதையை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் 16 வகை செல்வங்களும் கிட்டும், மங்கல காரியங்கள் யாவும் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்

லலிதா என்றால் காப்பவள்! ஸ்ரீலலிதா மகா திரிபுரசுந்தரி சிவபெருமானோடு பிரிக்கமுடியாத ஆதி பரம்பொருள். ஆதியும் அந்தமுமான சிவபெருமானும் சக்தியும் ஒன்றிணைந்த லலிதாவுக்கு மேல் தெய்வமேயில்லை. அகில உலகங்களுக்கும் தாயானவள் ஸ்ரீலலிதாம்பிகை. அவளை மனமுருகி வழிபட்டால் கஷ்டங்களெல்லாம் தீரும். யாரொருவர் தொடர்ந்து ஸ்ரீலலிதா உபாசனை செய்கிறாரோ அவரது பார்வையால் எதிரிகள் அடி பணிவார் என்கின்றன ஞான நூல்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

தீய சக்திகளை அழிக்கவென்றே பிறந்தவள் ஸ்ரீலலிதா. அசுரர்களை ஒழித்து தேவர்களை காக்க அக்னி குண்டத்தில் அவதரித்தாள் ஸ்ரீலலிதா. அசுர சக்திகளின் இடையூறுகளை தாங்கமுடியாமல், தேவர்கள், ஹோமம் வளர்த்து, லலிதாவை மனமுருகி வேண்டி நின்றனர். ஸ்ரீலலிதாவை வரவைக்க தேவர்கள் தங்களின் தேகத்தையே யாகத்தில் அர்ப்பணிக்கத் தயாரானார்கள். அப்பொழுது ஞானமாகிய அக்னியிலிருந்து உதித்தாள் மகாலலிதா தேவி. இவளை எண்ணி வழிபட எதிர்ப்புகள் விலகும்.

அதிலும் குறிப்பாக ஸ்ரீபஞ்ச தசாஷரி மந்திரம் சொல்லி அம்பிகையை வழிபட எல்லா எதிர்ப்புகளும் விலகும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமா, இந்த மந்திரத்தால் இதுவரை வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கள காரியங்கள் எல்லாம் இனிதே நடைபெறும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்பட்டு குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.

ஸ்ரீலலிதாம்பிகைக்கு, ஆலயங்கள் மிகவும் அரிதாகவே இருக்கின்றன. அதில் சிறப்பானது என்றால் செஞ்சிக்கு அருகே செல்லபிராட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இது ராமாயண காலத்தில் இருந்தே வழிபடப்பட்டது என்கிறது தலவரலாறு. அக்ஷரங்களைக் குறியீடாக கொண்டு மகரிஷி ரிஷியசிருங்கரால் வழிபடப்பட்ட சிறப்பு மிக்கவள் ஸ்ரீஅக்ஷர செல்வ லலிதாம்பிகை. அலைமகள், கலைமகள், மலைமகள் என முப்பெரும் சக்திகளும் சேர்ந்து ஒரே சக்தியாக பரப்பிரம்ம சக்தியாக ஸ்ரீஅக்ஷர லலிதா செல்வாம்பிகையாக இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறாள். மேல்மலையனூருக்கு அங்காளம்மன் எழுந்தருளியபோதே இங்கு லலிதாம்பிகையும் இங்கே எழுந்தருளினாள் என்பது நம்பிக்கை. ஸ்ரீராமர் இந்த தலத்துக்கு வந்து அம்பிகையைத் தொழுது ஸ்ரீபஞ்ச தசாக்ஷரி மந்திரம் ஜபித்து ராவணனை வென்றார் என்பதும் நம்பிக்கை. இன்னும் சிறப்பாக இந்த ஆலயத்தில் பீஜாட்சர எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கற்பலகை சிலையில் மகா மந்திரங்களின் சூட்சமம் அடங்கியுள்ளது. ஜகன்மாதா ஆதிபராசக்திக்கு உண்டான மந்திரத்தின் சூட்சம எழுத்துக்கள் அவை.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம்

இங்கு ஸ்ரீஅக்ஷர செல்வ லலிதையை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் 16 வகை செல்வங்களும் கிட்டும், மங்கல காரியங்கள் யாவும் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. இதனால் வாசகர்கள் நலமும் வளமும் பெற வரும் 2024 நவம்பர் 15 ஐப்பசி பௌர்ணமி நாளில், கார்த்தீக கௌரி விரதம், ஸ்ரீலக்ஷ்மி பூஜை, ஸ்ரீதுளசி விரதம் கூடிய நன்னாளில் செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டி ஸ்ரீஅக்ஷர லலிதா செல்வாம்பிகை திருக்கோயிலில் ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம் நடைபெற உள்ளது.

இங்கே முப்பெருந்தேவியரும் பார்வதி கால சக்தியாக (காலப்பிரம்மம்) லக்ஷ்மி ஒளி சக்தியாக (அர்த்தப்பிரம்மம்) சரஸ்வதி ஒலி சக்தியாக (நாதப்பிரம்மம்) மூன்று சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக பரப்பிரம்ம சக்தியாக அக்ஷ்ர லலிதா செல்வாம்பிகையாக அருள் பாலித்து வருகிறாள். இவளை வணங்கினால் ஏழேழ் பிறவிகளிலும் செய்த வினைகளும் தோஷங்களும் நீங்கி இக வாழ்வில் இன்பமும் பர வாழ்வில் மோக்ஷமும் அடையலாம் என்பது ஆன்றோர் வாக்கு.

இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு சங்கல்பித்தால் அறிவும் ஆற்றலும் பெருகும். உடல் பலமும் மனோபலமும் அதிகரிக்கும். ஆயுள் விருத்தி உண்டாகும், உங்களின் எல்லா விருப்பங்களையும் வேண்டுதல்களையும் சிறப்பாக நிறைவேற்றித் தரும். ஸ்ரீலலிதாவின் அருள் ஸித்திப்பதற்கும், மகாயோகினிகள் உங்களை எப்போதும் பாதுகாக்கவும் இந்த ஹோமம் உதவும்.

எதிரிகளால் உண்டாகும் பிரச்னைகள் நீங்கும். வம்பு, வழக்குகள், அவமானம் போன்றவைக்கு தீர்வு கிடைக்கும். உங்களின் உயிர்க்கு ஏற்படவிருக்கின்ற கண்டங்கள், ஆபத்துகள் நீங்கும். பொருள் விரயம், தொழில் முடக்கம், வியாபாரத்தில் தோல்வி, வேலையில் எதிர்ப்புகள் நீங்கும். தரித்திரம் நீங்கும். பாதுகாப்பான எதிர்காலம் உருவாகும்.

ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்

குழந்தைப்பேறு, மணப்பேறு, வெளிநாட்டு யோகம், உறவு மேம்பாடு உள்ளிட்ட நன்மைகளும் கிட்டும். முக்கியமாக நோய்கள் தீரும். மங்கள வாழ்வும் மனையறம் விளங்கவும் உதவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஹோமப் பிரசாதம் (விசேஷ ரட்சை, அட்சதை, மற்றும் குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

`எல்லாம் அந்த ரங்கன் செயல்னுதான் சொல்லணும்' - இந்திரா சௌந்தர்ராஜனின் இறுதி வார்த்தைகள்

எழுத்துலக ஆளுமைகளில் ஒருவரான எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திருவரங்கனின் திருவடியில் கலந்துவிட்டார்.சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைக்கதைகள் என இவரின் படைப்புகள் காலத்தால் அழியாத... மேலும் பார்க்க

`திமுக அரசு ஆன்மிக அரசு' - பெரிய கோயில் சதய விழாவில் தருமபுரம் ஆதீனம் புகழாரம்!

மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த தினம் சதய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபடுகிறது. இவ்விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என கடந்த 2022-ல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ராஜராஜ சோழனின் 1039-வது சத... மேலும் பார்க்க

1039-வது சதய விழா: `கணவற்கு நிலச்சுமை குறைந்தது என மகிழ்ந்த ஆதிசேடன் மனைவியர்" ராஜராஜனின் பெருமைகள்

பொதுவாக அரசர்களது பிறந்தநாள் விழாவினைப் 'பெருமங்கலம்' என்றும் ; 'புண்ணிய நன்னாள்' என்றும் போற்றுவது தொன்று தொட்ட தமிழ் மரபு. இதுபோன்ற நாள்களில் அரசர்கள் கொலை தவிர்த்து, சிறை விடுத்து, வெள்ளணி அணிந்து,... மேலும் பார்க்க

ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்: 6 வேண்டுதல்களையும் உடனே நிறைவேற்றும் அற்புத வழிபாடு; பங்கு கொள்ளுங்கள்!

வரும் 2024 நவம்பர் 15 ஐப்பசி பௌர்ணமி நாளில், கார்த்தீக கௌரி விரதம், ஸ்ரீலக்ஷ்மி பூஜை, ஸ்ரீதுளசி விரதம் கூடிய நன்னாளில் செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டி ஸ்ரீஅக்ஷர லலிதா செல்வாம்பிகை திருக்கோயிலில் ஸ்ரீ... மேலும் பார்க்க

கல்லறை திருநாள்: மதுரையில் முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை...| Photo Album

மதுரையில் கல்லறை திருநாள்மதுரையில் கல்லறை திருநாள்மதுரையில் கல்லறை திருநாள்மதுரையில் கல்லறை திருநாள்கல்லறை திருநாள்கல்லறை திருநாள்கல்லறை திருநாள்கல்லறை திருநாள்கல்லறை திருநாள்கல்லறை திருநாள்கல்லறை திர... மேலும் பார்க்க

கரூரில் திருவிளக்கு பூஜை: ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியின் அருளால் வேண்டியது நடக்கும்! நீங்களும் வாங்க!

2024 நவம்பர் 22-ம் தேதி கரூர் ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி திருக்கோயிலில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்குபூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக.... மேலும் பார்க்க