ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்: 6 வேண்டுதல்களையும் உடனே நிறைவேற்றும் அற்புத வழிபாடு; பங்கு கொள்ளுங்கள்!
வரும் 2024 நவம்பர் 15 ஐப்பசி பௌர்ணமி நாளில், கார்த்தீக கௌரி விரதம், ஸ்ரீலக்ஷ்மி பூஜை, ஸ்ரீதுளசி விரதம் கூடிய நன்னாளில் செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டி ஸ்ரீஅக்ஷர லலிதா செல்வாம்பிகை திருக்கோயிலில் ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம் நடைபெற உள்ளது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
ஸ்ரீலலிதாம்பிகையே நான் பேசும் வார்த்தைகள் உனக்கான மந்திர ஜபமாகவும்; என் அசைவுகள் யாவும் உன்னுடைய முத்திரைகளாகவும்; என் நடை உன்னைப் பிரதட்சணமாகவும், நான் உண்பதெல்லாம் உனது ஹோமப் பொருளாகவும்; நான் படுப்பது உன்னை வணங்குவதாகவும்; எனது வாழ்வதற்காகச் செய்கின்ற செயல்கள் யாவும் உனக்கு பூஜைகளாகட்டும்! என்று சௌந்தர்ய லஹரியில் ஜகத்குரு ஆதிசங்கரர் வேண்டுகிறார்.
அன்னை ஆதிபராசக்தியின் மூல வடிவமானவள் ஸ்ரீலலிதா. ஶ்ரீலலிதாவை வணங்கினால் சகல தெய்வங்களை வணங்கிய பலன் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள். ஶ்ரீபஞ்ச தசாஷரி போன்ற மந்திரமோ, ஶ்ரீலலிதை போன்ற தெய்வமோ, ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திரமோ அன்றி உயர்வான விஷயம் வேறில்லை என்கின்றன ஞான நூல்கள்.
அ; உ; ம் என்ற அக்ஷரங்களைக் கொண்டே பிரணவம் உருவானது. இந்த ஆதி அக்ஷரம் உருவாக தேவி, ஸ்ரீஅக்ஷர லலிதாவாக வடிவெடுத்தாள். அவ்வெனும் எழுத்தினால் தேவி அகண்டம் ஏழுமாகினாள்; உவ்வெனும் எழுத்தினால் சகல ஜீவனாக உருத்தரித்து நின்றாள். மவ்வெனும் எழுத்தினால் ஜீவன்கள் மயங்கின. பிறப்பும் இறப்பும் தொடர்ந்தன. இவ்வாறு அவ்வும் உவ்வும் மவ்வுமாய் தேவி வடிவெடுக்க பிரபஞ்சம் தோன்றியது என்கின்றன புனித நூல்கள்.
அபூர்வமான ஸ்ரீஅக்ஷர லலிதா செல்வாம்பிகை வடிவம் தொன்மையானது. இந்த தொன்மையான தேவியின் ஆலயம் செஞ்சிக்கு அருகே செல்லபிராட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இது ராமாயண காலத்தில் இருந்தே வழிபடப்பட்டது என்கிறது தலவரலாறு. அக்ஷரங்களைக் குறியீடாக கொண்டு மகரிஷி ரிஷியசிருங்கரால் வழிபடப்பட்ட சிறப்பு மிக்கவள் ஸ்ரீஅக்ஷர செல்வ லலிதாம்பிகை. அலைமகள், கலைமகள், மலைமகள் என முப்பெரும் சக்திகளும் சேர்ந்து ஒரே சக்தியாக பரப்பிரம்ம சக்தியாக ஸ்ரீஅக்ஷர லலிதா செல்வாம்பிகையாக இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறாள். மேல்மலையனூருக்கு அங்காளம்மன் எழுந்தருளியபோதே இங்கு லலிதாம்பிகையும் இங்கே எழுந்தருளினாள் என்பது நம்பிக்கை. ஸ்ரீராமர் இந்த தலத்துக்கு வந்து அம்பிகையைத் தொழுது ஸ்ரீபஞ்ச தசாக்ஷரி மந்திரம் ஜபித்து ராவணனை வென்றார் என்பதும் நம்பிக்கை.
இங்கு ஸ்ரீஅக்ஷர செல்வ லலிதையை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் 16 வகை செல்வங்களும் கிட்டும், மங்கல காரியங்கள் யாவும் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. இதனால் வாசகர்கள் நலமும் வளமும் பெற வரும் 2024 நவம்பர் 15 ஐப்பசி பௌர்ணமி நாளில், கார்த்தீக கௌரி விரதம், ஸ்ரீலக்ஷ்மி பூஜை, ஸ்ரீதுளசி விரதம் கூடிய நன்னாளில் செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டி ஸ்ரீஅக்ஷர லலிதா செல்வாம்பிகை திருக்கோயிலில் ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு சங்கல்பித்தால் கார்ய ஸித்தி, தைர்யம், தீர்க்காயுஸ், ரோகமின்மை, வித்யா பிராப்தி, சௌபாக்ய பிராப்தி உண்டாகும் என்பது ஐதிகம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
இந்த மண்ணுலகில் வாழும் சகல மனிதரும் வேண்டுவது மேற்கண்ட 6 பலன்களை மட்டுமே. இந்த ஆறுக்குள்ளேயே சகல வேண்டுதல்களும் அடங்கிவிடும் என்பதும் உண்மை. எனவே உங்கள் குடும்பமும் சுற்றமும் உறவுகளும் செழித்து வாழ்வாங்கு வாழவும், தலைமுறைகள் சிறப்புற்று வாழவும் இந்த ஸ்ரீபஞ்ச தசாக்ஷரி ஹோமத்தில் கலந்து கொண்டு பயன் பெறுவீர்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஹோமப் பிரசாதம் (விசேஷ ரட்சை, அட்சதை, மற்றும் குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07