செய்திகள் :

"என் தொகுதிக்கு வாங்க... ஒரு எம்எல்ஏ என்ன செய்ய முடியும் எனக் காட்டுகிறோம்" - வானதி சீனிவாசன்

post image

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் 27வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பா.ஜ.க சார்பில் கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் மலரஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன்,

“27 ஆண்டுகளாக ஏன் இதைத் திரும்பத் திரும்ப மக்களுக்கு நினைவுபடுத்துகிறீர்கள் எனக் கேட்கின்றனர். நம் சமூகத்தைப் பிளக்க நினைக்கும் வரலாற்றை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

வானதி சீனிவாசன்

அதனால் கோவையின் வளர்ச்சி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதை ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துச் செல்லாமல் இருக்க மாட்டோம். பொங்கல் வைக்காத இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை வைத்து ஏமாற்றுபவர் முதலமைச்சராக இருக்கிறார்.

அவர் தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விழாக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர். பா.ஜ.க-வினர் நாட்டைப் பிரிப்பார்கள், மதக் கலவரம் செய்வார்கள் என்று பேசுகிறார்கள். அரசியலில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க மத வாதத்தைக் கையில் எடுப்பதாகவும் சொல்கிறார்கள்.

பா.ஜ.க பிரிவினைவாதம் செய்கிறது என்று பேசும் கட்சிகள் என் தொகுதிக்கு வந்து பாருங்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினரால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறோம். சிறுபான்மை மக்களுக்கு எந்த வேறுபாடு, மாறுபாடு காட்டுவதில்லை. பா.ஜ.க மதக் கலவரத்துக்கான கட்சி அல்ல.

முதலமைச்சர் ஸ்டாலின்

பா.ஜ.க பிரிவினை வாதத்தைத் தூண்டுகிறது என்கிறார்கள். ஆனால் இதை வெளிநாடுகளில் உள்ள யாரும் நம்ப மாட்டார்கள். தமிழகமும் ஒரு நாள் நம் கைக்கு வரும். அதுவரை தொடர்ந்து உழைப்போம்.” என்றார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Seeman : 'பிரஷாந்த் கிஷோருக்கு திருப்பரங்குன்றம் பிரச்னையை பற்றி தெரியுமா? - சீமான் காட்டம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது,'திருப்பரங்குன்றம் பிரச்னையும் அத்திக்கடவு அவினாசி திட்டமும் பிரஷாந்த் கிஷோருக்கு தெரியுமா?' என காட்டமான விமர... மேலும் பார்க்க

`அண்ணாமலை அல்ல, அவரின் தாத்தாவே வந்தாலும்..! ; எங்களால்தான் பி.கே-வுக்கு வெற்றி’ - அமைச்சர் ரகுபதி

`செங்கல்லை அல்ல சிறுபுல்லைக் கூட...’ புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ மூன்றாம் வீதியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுபான்மையினர் நல கல்லூர... மேலும் பார்க்க

`செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்று...’ - ஸ்டாலின் பேச்சின் பின்னணி என்ன?

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு (DISHA) குழுவின் மாநில அளவிலான 4வது ஆய்வுக் கூட்டம் இன்று (15.02. 20... மேலும் பார்க்க

Modi in US: `இந்திய குடியேறிகள்; தீவிரவாதம், அணுசக்தி' - மோடி, ட்ரம்ப் பேசியது என்ன?!

அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக வசிக்கும் யாவரையும் இந்தியா திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்றும், ஆள்கடத்தலுக்கு முடிவு கட்டப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். அமெரிக்காவில் குடியே... மேலும் பார்க்க

'தமிழ்த்தேசியவாதிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினால் சட்ட ஒழுங்கு கெடுமா? - அரசுக்கு வேல்முருகன் கேள்வி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகன் புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, 'தமிழ்த்தேசிய போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமா?' என அரச... மேலும் பார்க்க