செய்திகள் :

'எலானுக்கு மன்னிப்பு உண்டு' - சமாதான கொடியை பறக்கவிடும் ட்ரம்ப், எலான் மஸ்க்; பின்னணியில் என்ன?

post image

00"கடந்த வாரம் அதிபர் ட்ரம்ப் குறித்து நான் போட்ட பதிவுகளுக்கு வருத்தமடைகிறேன். அவை மிகவும் எல்லை மீறிவிட்டன' - இது நேற்று எலான் மஸ்க் போட்ட பதிவு. 'என்னதிது...?' என்று இந்தப் போஸ்ட் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கிளப்பியது.

ஏன் இந்தத் திடீர் முடிவு?

கடந்த வாரம் முழுவதும் ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த எலான் மஸ்க் திடீர் அந்தர்பல்டி அடித்ததுதான் இந்த ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சிக்கு காரணம்.

எலான் மஸ்க்கின் அதிரடி பதிவுகளால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எலான் மஸ்க் நிறுவனங்களுக்கு அரசு கொடுத்து வரும் ஆதரவுகளை நிறுத்தும் என்று எச்சரித்தார். இன்னொரு பக்கம், ட்ரம்பை விமர்சித்ததில் இருந்து டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சரியத் தொடங்கின.

ட்ரம்ப் - எலான் மஸ்க்
ட்ரம்ப் - எலான் மஸ்க்

இதனையடுத்து, அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி வான்ஸ், வெள்ளை மாளிகை தலைமைப் பணியாளர் சூசிவைல்ஸ், மற்றும் கிரிப்டோ ஆலோசகர் டேவிட்சாக்ஸ் ஆகியோர் எலான் மஸ்கை அழைத்து, இந்தப் பிரச்னையை சரி செய்யுமாறு பேசியிருக்கிறார்கள். இதனையடுத்து, எலான் மஸ்க் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 9) ட்ரம்ப் உடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். இதன் விளைவு தான் இந்தப் போஸ்ட் என்று தகவல்கள் கூறுகின்றன.

இன்னும் என்ன?

வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், 'ஒன் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்'லின் விமர்சனம் தவிர, ட்ரம்பை கடுமையாக சாடி இருந்த அனைத்து பதிவுகளையும் எலான் மஸ்க் நீக்கிவிட்டார்.

தற்போது சரிந்த எலான் மஸ்க் நிறுவன பங்குகள் ஏறுமுகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.

ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

எலான் மஸ்க்கின் இந்தக் கருத்து குறித்து நேற்று ட்ரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'எலான் மஸ்க் ஒரு பில்லிற்காக இவ்வளவு தூரம் செல்வார் என்று நான் நினைக்கவில்லை. மஸ்க் தான் பேசியதற்கு வருந்துகிறார் என்று நினைக்கிறேன். அவருக்கு மன்னிப்பு உண்டு' என்று பதிலளித்துள்ளார்.

சமாதானம் எல்லாம் சரிதான்... மீண்டும் பழைய நட்பு தொடருமா?!

'ஒரே பாடலில் முதலமைச்சர் ஆக முடியாது விஜய்!' - எச்சரிக்கும் மருது அழகுராஜ் | பேட்டி

நமது எம்.ஜி.ஆர், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ். விஜய்க்கும் தவெகவுக்கும் ஆதரவாக கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தார். விஜய்யின் கட்சியில் விரைவில் இணையப்போகிறார் என்றெல்லாம் ... மேலும் பார்க்க

Vijay: "இளைய காமராஜர்னு சொல்லாதீங்க; தேர்தல் பற்றி பேச வேண்டாம்" - மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழாவை, அதன் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களைத் தொகுதிவாரியாக அழைத்துப் பாராட்டி வருகிறார்.Vijayஇரண்டுக... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash : 'அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை...' - விஜய் வருத்தம்!

'தவெக கல்வி விழா!'தவெக தலைவர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டும் வகையில் கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறார். மாமல்லபுரத்தில் நடந்த இந்த நிகழ்வில் அகமத... மேலும் பார்க்க

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 'இன்னும் ஒரு போரா?' - கைவிரித்த அமெரிக்கா; என்ன நடக்கிறது?

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது.நேற்று இரவு, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறது. ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற இஸ்ரேலின் அச்சம்தான் இந்தத் த... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash : பறவை மோதியதா இல்லை மனித தவறா? | Detailed Technical Explanation

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்திருக்கின்றனர். இந்த விபத்து எப்படி நடந்தது? அவசரகாலங்களில் பயணிகளைக் காப்பாற்ற விமானிகள் என்ன மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவா... மேலும் பார்க்க