`தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா... உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்!' - ஸ்டாலின் க...
எல்லோருக்குமான கார் கியா சிரோஸ்!
கால இயந்திரத்தின் வழியாக எதிர்காலத்தில் இருந்து இறங்கி வந்த கார் மாதிரி இருக்கிறது கியா சிரோஸ் டிசைன். ஆம். எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாக இருக்கிறது.
ஹை-டெக் கார் என்ற எண்ணத்தை வெளிப்புறத் தோற்றத்திலேயே சிரோஸ் ஏற்படுத்திவிடுகிறது. உற்றுக் கவனித்தால் விலை உயர்ந்த EV9 காரின் சாயலை இதில் பார்க்கலாம். கியாவின் டைகர் நோஸ் அடையாளத்தை கிரில்லில் பார்க்க முடிகிறது. ஐஸ் கியூப் மாதிரி ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கும் மூன்று LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸும், அதற்கு பார்டர் கட்டியதைப் போல செங்குத்தாக அமைக்கப்பட்டிருக்கும் LED DRL-ம் புதுமை. வீல் ஆர்ச் டிசைனும் பட்டையைக் கிளப்புகிறது. இரவு நேரங்களில் கால் வைக்கும் இடத்தில் கியா லோகோவை கோலம் போட்டுக் காட்ட பக்கவாட்டுக் கண்ணாடிகளில் Puddle Lamp கொடுத்திருக்கிறார்கள். A, C மற்றும் D பில்லர்களை பிளாக் அவுட் செய்துவிட்டு B பில்லருக்கு மட்டும் பாடி கலரே கொடுத்திருப்பதும் Break the Rules டைப்தான். 17 இன்ச் அலாய் வீல் டிசைன் மற்றும் L வடிவ டெயில் லைட் டிசைன்ஸும் அசத்தல்.

2550 மிமீ அளவுக்கு வீல் பேஸ் கொண்ட நான்கு மீட்டருக்கு உட்பட்ட கார்தான் என்றாலும், இதன் பூட் ஸ்பேஸ் 465 அளவுக்குத் தாராளம். டால்பாய் டிசைன் என்பதால் இரட்டை வண்ணத்தில் இருக்கும் பின் சீட்டும் ஆச்சரியப்படும் அளவுக்குத் தாரளமாக இருப்பதுடன், அதற்கு ரெக்லைனிங், ஸ்லைடிங் வசதியும் கொடுத்திருக்கிறார்கள். அனைத்து சீட்டுகளுமே வென்டிலேட்டட் சீட்ஸ்.
டேஷ் போர்டு டிசைன் விசில் போட வைக்கிறது. டச் ஸ்கீரின், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் இரண்டும் 30 இன்ச் பேனலாக இருக்கும் Connected Car Navigation Cockpit ஆகக் காட்சியளிக்கிறது.இதில் 12.3 இன்ச் அளவுக்கு டச் ஸ்கிரீன், அதே அளவில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆகியவற்றுடன் 5 இன்ச்சுக்கு ஏர் கண்டிஷன் கன்ட்ரோல் பேனல் ஆகியவற்றை அடக்கியிருக்கிறார்கள்.



நான்கு வகைகளில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையில் டிரைவர் சீட்டை பவர்ட் சீட்ஸாகக் கொடுத்திருக்கிறார்கள். 2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டூயல் பேனல் பனோரமிக் சன் ரூஃப், 64 வண்ணக் கலவைகளைக் கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங், 8 ஹர்மான் கார்டன் ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், வொயர்லஸ் சார்ஜர், வொயர்லஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராடு ஆட்டோ போன்ற வசதிகளையும் கணக்கு வழக்கு பார்க்காமல் கொடுத்திருக்கிறார்கள். கியா கனெக்ட் 2.0 வசதியும் உண்டு. சர்வீஸ் சென்டருககு உடனடியாகச் செல்ல வசதி இல்லாத சமயங்களில், இருக்கும் இடத்தில் இருந்தே சர்வீஸ் சென்டரோடு தொடர்பு கொண்டு சிறு சிறு பிரச்சனைகளைச் சரி செய்து கொள்ள KCD(Kia Connect Diagnostics), வசதி உண்டு. அதேபோல Over-the-air (OTA) மூலம் Software Updates-ம் கொடுப்பார்கள்.
பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் 6 காற்றுப்பைகள், டயர் ப்ரஷர் மானிட்டர், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ABS, ESC, VSM, ISOFIX சீட்ஸ் போன்ற அம்சங்களோடு 8 பார்க்கிங் சென்ஸார் போன்ற அம்சங்களை ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியன் ட்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள். அனைத்துக்கும் மேலாக ADAS Level 2 வசதி கொண்ட வேரியன்ட்டும் உண்டு. இதில் அட்வான்ஸ்டு 360 டிகிரி கேமரா, Supportive Lane Keep Assist, Automated High Beam Assist, Vigilant Blind View Monitor, Pro-active Lead Vehicle Departure Alert, Life-saving Frontal Collision Avoidance Assist ஆகிய அம்சங்கள் உண்டு.

இன்ஜின்: இதில் இருக்கும் சக்தி வாய்ந்த 1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 120 ps அளவுக்கு சக்தியையும் 172Nm அளவுக்கு, போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியது.
இதில் டீசல் இன்ஜின்தான் வேண்டும் என்கிறவர்களுக்கு 116 PS அளவுக்கு சக்தியையும், 250Nm அளவுக்கு டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் CRDi டீசல் இன்ஜின் ஆப்ஷனும் உண்டு.
ரீஃபைண்டு சஸ்பென்ஷன், நல்ல ரைடு குவாலிட்டி ஆகியவை ஒரு சேர இருப்பதால் நகர்ப்புறப் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும்.