ஏரியில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து, நீரில் மூழ்கிய முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், சிறுவாடி திடீா் நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த மாணிக்கம் மகன் ராமச்சந்திரன் (70). இவா், அதே கிராமத்திலுள்ள பெரிய ஏரியில் வெள்ளிக்கிழமை மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக ஏரியில் ராமச்சந்திரன் தவறி விழுந்தாா். சிறிது நேரத்தில் அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த பிரம்மதேசம் போலீஸாா் நிகழ்விடம் வந்து சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.