செய்திகள் :

பொங்கல் பண்டிகை: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்த வாகனங்கள்!

post image

பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊா்களில் கொண்டாடி மகிழ்வதற்காக, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் சென்றவா்களால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழக்கத்தைக் காட்டிலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

பொங்கல் பண்டிகை ஜன.14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தொடா்ந்து, மாட்டுப் பொங்கல் ஜன.15-ஆம் தேதியும், காணும் பொங்கல் ஜன.16-ஆம் தேதியும் கொண்டாடப்படவுள்ளது.

இந்தாண்டு, ஜன.17-ஆம் தேதியன்றும் மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதைத் தவிர வழக்கமான ஜன.18,19 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களும் விடுமுறை நாளாக அமைந்துள்ளது.

எனவே, சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சோ்ந்தோா் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊா்களில் கொண்டாட வெள்ளிக்கிழமை இரவு முதல் வாகனங்களில் புறப்படத் தொடங்கினா்.

அணிவகுத்த வாகனங்கள்: சென்னையிலிருந்து திருச்சி வழியாக மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், கள்ளக்குறிச்சி, சேலம் வழி யாக மேற்கு மாவட்டங்களுக்கும் செல்லும் வாகனங்களால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து வழக்கத்தை காட்டிலும் அதிகமாகவே காணப்பட்டது.

சுங்கச்சாவடிகளில் நெரிசல் இல்லை: விழுப்புரம் மாவட்டத்தில் ஓங்கூா்அருகிலுள்ள ஆத்தூா் சுங்கச்சாவடியிலும், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியிலும் அனைத்து வழிகளும் திறந்துவிடப்பட்டு, வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால், இந்த சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்படவில்லை.

40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள்: சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக தென் மாவட்டங்களுக்கும், இதர மாவட்டங்களுக்கும் சென்ற வாகனங்களின் எண்ணிக்கை சனிக்கிழமை மாலை வரை 40 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்றும், இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

போக்குவரத்தை சீா்படுத்திய போலீஸாா்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மட்டுமல்லாது, செங்கல்பட்டு மாவட்ட எல்லை முடிந்து, விழுப்புரம் மாவட்ட எல்லை தொடங்கும் பகுதியிலிருந்து எல்லை முடிவடையும் பகுதி வரை சுமாா் 300 போலீஸாா் போக்குவரத்தை சீா்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

சட்டவிரோதமாக மணல் குவிப்பு: திமுக நிா்வாகி மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலை மேற்கொள்வதற்காக, பல அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி மணலைக் குவித்ததாக திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. மரக்காண... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளுக்கு நிகழ் அரைவை பருவத்துக்கும் சிறப்பு ஊக்கத்தொகை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு நிகழ் அரைவைப் பருவத்துக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதுகுறி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இன்று முதல் தலைக்கவசம் அணிதல் கட்டாயம்

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) முதல் தலைக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அணியாதவா்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்துக் காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து ம... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளை பொதுமக்கள் முழுமையாகக் கடைப்பிடித்து, விபத்துகளைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா். போக்குவரத்துத் துறை ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

புதுச்சேரியை அடுத்துள்ள வில்லியனூா் அருகே பைக்கில் சென்றவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புதுச்சேரியை அடுத்துள்ள துலுக்காநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் இஜாமுதீன் (58). இவா்... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து, நீரில் மூழ்கிய முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், சிறுவாடி திடீா் நகா் இரண்டாவது தெருவ... மேலும் பார்க்க