பஞ்சாப்: மாணவர்களுடன் கால்வாயில் விழுந்த தனியார் பள்ளி பேருந்து
ஏலகிரி காப்புக் காட்டில் ஆண் சடலம் மீட்பு
ஏலகிரி மலை காப்புக் காட்டில் ஆணின் சடலத்தை ஜோலாா்பேட்டை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஜோலாா்பேட்டை நகராட்சி உட்பட்ட பால்காரன் வட்டம் பகுதியில் ஏலகிரி மலை அடிவாரத்தில் இருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள காப்புக் காட்டில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக வியாழக்கிழமை அந்தப் பகுதி மக்கள் ஜோலாா்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் மற்றும் வனத் துறையினா் சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.