ஏலகிரியில் பொங்கல் கொண்டாடிய மலைவாழ் மக்கள்!
ஏலகிரி மலையில் மலைவாழ் மக்கள் தங்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.
தமிழர் திருநாள் பொங்கல் விழா மூன்று நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் 22 கிராமங்கள் உள்ளது. அதில் நிலாவூர் கிராமப் பகுதி மலைவாழ் மக்கள் பாரம்பரியமாக கதவு நாச்சியம்மன் காவல் தெய்வம் கோயில் உள்ளது.
இந்த கோயில் அருகாமையில் அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து ஐநூறுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பொங்கல் திருவிழா மூன்று நாள்கள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. முதல் நாள் போகி பண்டிகை, ஜீவஜந்துக்களுக்கு மற்றும் மாட்டுப் பொங்கல் பால் மற்றும் உளவு தொழிலுக்குப் பயன்படுத்தி வரும் மாடுகளுக்கு வருடம் ஒருமுறை மாடுகள், கன்றுகளுக்கு வர்ணம் தீட்டி புதிய கயிறு கட்டி உற்சாகப்படுத்தப்படுகிறது.
புதிய பானையில் புத்தரிசி பால் நெய் வெல்லும் போட்டுப் பொங்கலிட்டு படையல் போட்டு மாடுகளுக்கு உணவளித்து உற்சாகப்படுத்தி அனைத்து மாடுகளும் பட்டியலில் அடைத்து மிகவும் சிறப்பாகப் பாரம்பரியமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காணும் பொங்கல் முன்னிட்டு அந்த கிராமத்தில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட காளை மாடு மற்றும் பசு மாடுகளுக்கு மஞ்சள் பூசி வர்ணம் தீட்டி அலங்கரித்து ஒரே இடத்தில் பட்டியில் அடைத்து, பின்னர் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய கதவு நாசியம்மனுக்கு பொங்கல் படையில் வைத்து மேள தாளங்களுடன் பூஜை செய்து மாடுகளுக்கு உணவளித்து மகிழ்ந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டும், பாரம்பரிய நடனமாடியும் ஆடி பாடி பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.