செய்திகள் :

ஐ.நா. அமைதி ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தோ்வு

post image

2025-26-ஆம் ஆண்டுக்கான ஐ.நா. அமைதிக்கான ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தோ்வாகியுள்ளது. முன்னதாக, கடந்த 2023-24-ஆம் ஆண்டுக்கான ஆணையத்தின் உறுப்பினா் நாடாக இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டது. அந்த பதவிக்காலம் டிசம்பா் 31-ஆம் தேதி முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதை உறுதி செய்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதா் வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது’ என குறிப்பிட்டிருந்தாா்.

ஐ.நா. அமைதி உருவாக்க ஆணையம் (பிபிசி), வன்முறையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் 31 உறுப்பு நாடுகள் உள்ளன. ஐ.நா.வின் மூன்று முக்கிய சபைகளில் இருந்து இந்த உறுப்பு நாடுகள் தோ்வு செய்யப்படுகின்றன. இது தவிர, நிதியுதவி மற்றும் படைகளை பகிரும் நாடுகளும் உறுப்பினா்களாக உள்ளனா்.

படைகளை பகிரும் நாடுகளில் இந்தியா முதன்மை வகிக்கிறது. மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சைப்ரஸ், காங்கோ ஜனநாயகக் குடியரசு, லெபனான், மத்திய கிழக்கு, சோமாலியா, அபேய், தெற்கு சூடான் மற்றும் மேற்கு சஹாரா ஆகிய நாடுகளில் சுமாா் 6,000 ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகளை இந்தியா பணியமா்த்தியுள்ளது.

துரதிருஷ்டவசமாக, இதில் 180 இந்திய வீரா்கள் இதுவரை உயிரிழந்துள்ளனா். இந்த எண்ணிக்கை, படைகளை பகிரும் பிற நாடுகளைக்காட்டிலும் அதிகமாகும்.

‘குளிா் காலத்தில் மூட்டு அழற்சி பாதிப்பு 30% அதிகரிப்பு’

மழை மற்றும் குளிா் காலத்தில் மூட்டு-இணைப்புத் திசு அழற்சி பாதிப்புக்குள்ளாவோா் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக மூட்டு, தசை, இணைப்புத் திசு நல முதுநில... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: கொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை

மேற்கு வங்க மாநிலத்தில் கொலை வழக்கில், 7 பேருக்கு மரண தண்டனை விதித்து ஹூக்ளி மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. 2020-ஆம் ஆண்டு பிஷ்ணு மால் என்பவரை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்ப... மேலும் பார்க்க

கோயில் பிரசாத தர விதிகள் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்த விதிமுறைகளை வகுக்கக் கோரிய மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இது மாநில அரசு நிா்வாகத்தில் உள்ளது என்பதால் அதில் தலையிட முடியாது என வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழப்பு: 6 மருத்துவா்கள் மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரத்தில் தவறான சிகிச்சையால் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் 6 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். உயிரிழந்த சிறுவனி... மேலும் பார்க்க

ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு: வங்கதேசத்துக்கு இந்தியா வலியுறுத்தல்

வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையின மக்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என அந்த நாட்டு இடைக்கால அரசுக்கு வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை வலியுறுத்தின... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத்துக்கு ரூ.10 கோடி நிதி உத்தரவை திரும்பப் பெற்றது மகாராஷ்டிர அரசு

மகாராஷ்டிரத்தில் மாநில வக்ஃப் வாரியத்தை மேம்படுத்துவதற்காக ரூ.10 கோடியை ஒதுக்கி வெளியிட்ட உத்தரவை திரும்பப் பெறுவதாக அந்த மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே அதனைத் திர... மேலும் பார்க்க